முதல்வர் விஜய்


பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு தேவையான அனைத்தையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது.

இந்நிலையில் ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதார சுமையை அரசே ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், ” தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேவைகள் அனைத்தையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதார சுமையை அரசே ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

முதல்வர் விஜய்

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022 செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் அறிமுகம் செய்யப்பட்டது. 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டு, பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி தொடக்கி வைக்கப்படவுள்ளது.

பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் புதிய பெயர்ப்பலகைகளை 4க்கு 2 அடி அளவில் ஸ்டீல் குழாய்களில் தயாரித்து நிறுவ வேண்டும்; பள்ளிகளுக்குத் தேவையான சமயலறை, உணவுப் பொருள்கள் இருப்பு வைக்கும் அறை, குடிநீர், மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் சார்ந்த குறைகளை களைய வேண்டும்; மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் ஆகியவற்றை வாங்கித் தர வேண்டும் என்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆணையிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, இதற்காக ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. இந்த வசதிகள் அனைத்தையும் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பது தான் அதிர்ச்சியளிக்கிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் பட்டியலிடப்பட்டுள்ள பணிகளை செய்வதற்கு மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப ரூ.8000 முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகக் கூடும். இந்த செலவுகளை ஒட்டுமொத்தமாக தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது அநீதியாகும். காலை உணவுத் திட்டத்திற்காக பல நூறு கோடியை ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசு, இந்த வசதிகளை செய்து கொடுப்பதற்காக கூடுதலாக சில லட்சங்களை ஒதுக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதை செய்யாமல், அச்செலவுகளை தலைமை ஆசிரியர்கள் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை ஆசிரியர்களால் சமாளிக்க முடியாது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அரசு மதுக்கடைகள் போன்றவற்றில் அடிப்படை வசதிகளை செய்து கொள்வதற்காக அரசு நிதி ஒதுக்காமல், அதை பணியாளர்களின் தலையில் சுமத்தியதால் தான் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 60 ரூபாயும், அரசு மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாயும் வசூலிக்கும் நிலை உருவானது. அந்த கலாச்சாரத்தை ஒழிக்க முடியாமல் அரசு திண்டாடிக் கொண்டிருக்கிறது. அதே கலாச்சாரத்தை பள்ளிகளுக்கும் நீட்டித்தால் அங்கும் தவறுகள் நடக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும். நேர்மையையும், ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகளில் தவறுகள் கற்பிக்கப்படக்கூடாது.

எனவே, காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலரால் அனுப்பப்பட்டுள்ள இது தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். காலை உணவுத் திட்டத்திற்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள் மற்றும் பிற வசதிகளுக்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed