குல்தீப் யாதவ் - ரிஷப் பந்த்

Last Updated:

2022-ல் டெல்லி அணியில் இணைந்த அவர், இதுவரை 65 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் மிகச்சிறந்த விக்கெட்-டேக்கராக உருவெடுத்துள்ளார்

குல்தீப் யாதவ் - ரிஷப் பந்த்
குல்தீப் யாதவ் – ரிஷப் பந்த்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தம் (Trade Deal) அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) ஆகிய இரு அணிகளும் இணைந்து இந்த மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

இதன்படி, நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸிற்குத் திரும்பியுள்ளார்; அதே நேரத்தில், டெல்லி அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு சீசன்களுக்கு முன்பு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ஐபிஎல் வரலாற்றில் சாதனைத் தொகையான ரூ. 27 கோடிக்கு ரிஷப் பந்த் வாங்கப்பட்டார். மேலும், 2025 சீசனுக்கு முன்னதாக அவர் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இருப்பினும், லக்னோ அணியில் அவராலும், அந்த அணியாலும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாட முடியாமல் போனது.

2025 மற்றும் 2026 ஐபிஎல் தொடர்களில் அவர் முறையே 269 மற்றும் 312 ரன்கள் மட்டுமே எடுத்தார். தொடக்க வீரர் முதல் பினிஷர் வரை பல்வேறு வரிசைகளில் களமிறக்கப்பட்ட போதிலும், அவரால் தனது பிரம்மாண்ட விலைக்கு ஏற்றவாறு விளையாட முடியவில்லை.

தொடர்ந்து, ஏமாற்றமளிக்கும் 2026 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். தற்போது, மீண்டும் டெல்லி அணிக்குத் திரும்புவதற்காகத் தனது ஊதியத்தில் மிகப்பெரிய தொகையைக் குறைத்துக் கொள்ள (Pay-Cut) சம்மதித்துள்ளார். லக்னோவில் ரூ. 27 கோடி பெற்று வந்த பந்த், இனி டெல்லி அணியில் ஒரு சீசனுக்கு ரூ. 15 கோடி மட்டுமே ஊதியமாகப் பெறுவார் என்று ஐபிஎல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மறுபுறம், இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், டெல்லி அணியில் 5 சீசன்களாக ஆற்றிய பங்களிப்பிற்குப் பின் லக்னோ அணிக்கு மாறுகிறார்.

2022-ல் டெல்லி அணியில் இணைந்த அவர், இதுவரை 65 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் மிகச்சிறந்த விக்கெட்-டேக்கராக உருவெடுத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரூ. 13.25 கோடி பெற்று வந்த குல்தீப், தற்போது லக்னோ அணியில் சற்று கூடுதலான தொகையான ரூ. 13.50 கோடி ஒப்பந்த மதிப்பில் விளையாட உள்ளார்.

Source link


  1. buro pohoron vechnaya pamyat 319 Avatar
    buro pohoron vechnaya pamyat 319

    Ритуальные услуги buro-pohoron-vechnaya-pamyat под ключ в Москве и Московской области. Поможем быстро и деликатно организовать похороны, подготовить необходимые документы, подобрать ритуальные принадлежности, транспорт и место захоронения. Круглосуточная консультация и сопровождение опытных специалистов.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed