``விஷக் குப்பியா... தூக்குக் கயிறா? ஏன் ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்க வேண்டும்?" - திலகபாமா| PMK's Thilagabama Explains Why Party Is Skipping the By-Election

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போதும் அங்கம் வகித்துவருவதாகச் சொல்லிவரும் பாட்டாளி மக்கள் கட்சி, நடந்துமுடிந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளிக்காமல் ஒதுங்கி நின்றுகொண்டது.

“ஆளுங்கட்சியான த.வெ.க வேட்பாளருக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்’ என்று ஆரம்பத்தில் வலியுறுத்தியது பா.ம.க. ஆனால், அது நடைமுறை சாத்தியமற்றது என்று உணர்ந்த எதிர்க்கட்சிகள் தத்தமது வேட்பாளர்களை களமிறக்கிவிடவே, அமைதியாக ஒதுங்கிக்கொண்டது பா.ம.க.

குறிப்பாக மதுராந்தகம் தொகுதியில் 9% வாக்குவங்கியை வைத்திருக்கும் பா.ம.க ‘இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை’ என அறிவித்ததிலிருந்தே தமிழக அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

த.வெ.க அரசுக்கு ஆதரவளித்துவரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தொடர்ந்து ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராக குரல் எழுப்பிவருவதால், எந்நேரத்திலும் ஆதரவை விலக்கிக்கொள்ள வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், “கம்யூனிஸ்ட்டுகள் விலகிக்கொண்டால், பா.ம.க-வின் 4 எம்.எல்.ஏ-க்களை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக்கிக்கொள்ளும் முயற்சியாக த.வெ.க தலைமை பா.ம.க-வுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் பேச்சு எழுந்தது.

இதன் முன்னோட்டமாகவே, ‘இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை’ என்று முடிவெடுத்து பா.ம.க ஒதுங்கிக்கொண்டு, தொகுதியிலுள்ள பா.ம.க-வின் கணிசமான வாக்குகள் த.வெ.க வேட்பாளருக்குச் செல்ல வழி வகுத்துள்ளது” என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், நடப்பு அரசியல் குறித்த கேள்விகளோடு பா.ம.க பொருளாளர் திலகபாமாவிடம் பேசினோம்…

“‘ஆளுங்கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்க அ.தி.மு.க-வுக்கு பா.ம.க ஆதரவளித்திருக்க வேண்டும்’ என்று நீங்கள் நினைப்பதெல்லாம் மேலோட்டமான பார்வை. ஆனால், ஆழமான அரசியல் புரிதலோடும் தொலைநோக்குப் பார்வையோடும்தான் நாங்கள் ‘பொதுவேட்பாளர்’ என்று நிலைப்பாட்டை அறிவித்தோம்.

ஆனாலும் பொதுவேட்பாளரை நிறுத்த எந்தக் கட்சியும் தயாரில்லை எனும்போது, நாங்கள் ஒதுங்கி நிற்பதைத்தவிர வேறு வழியில்லை என்ற எங்கள் கட்சியின் கருத்தை நாங்கள் ஏற்கெனவே தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டோம்.

இந்த நிலையில், எங்கள் நிலைப்பாடு குறித்து நீங்கள் யூகிப்பதற்கெல்லாம் நாங்கள் என்ன பதில் சொல்ல முடியும்?”

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed