ஒருநாள் போட்டியில் அதிக சதம்:

ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் அண்மையில் இந்தியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அந்த வகையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல், கிரிக்கெட் உலகில் வேறு ஒரு சாதனையையும் படைத்தார். அதன்படி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை தன்னுடைய 50-வது சதத்தின் மூலம் படைத்தார்.

இந்நிலையில் சர்வதேச அளவில் 100 சதம் அடித்த வீரர் என்ற பெருமையுடன் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். இந்த சதனையையும் கோலி முறியடிப்பாரா மாட்டாரா? என்பது தொடர்பாக பல்வேறு வீரர்களும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

அந்த வகையில், சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் கூறியுள்ளார்.

கோலி நினைத்தை முடிப்பார்:

இது தொடர்பாக அவர் பேசுகையில், “விராட் கோலி பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும் போது அவர் இந்த சாதனையை செய்வார். இதுவரை 520 போட்டிகள் விளையாடி உள்ள அவர் 80 சதங்கள் அடித்து இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் 100 சதங்கள் அடித்துள்ளார். இதனிடையே, கோலி 100 சதங்களை எடுப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று எனக்குத் தெரியாது.

ஆனால், இன்னும் அவர் இளமையாக இருக்கிறார். அவர் விளையாடும் விதத்தை வைத்துச் சொல்கிறேன் அவர் எதை சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை கண்டிப்பாக சாதிக்க முடியும். அதேபோல் விராட் கோலி இன்னும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்” என்று கூறினார். இதனிடையே நிச்சயம் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்று அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

மேலும் படிக்க: Shivam Dube: ஆப்கானுக்கு எதிராக அழுத்தத்தில் சிறப்பாக ஆடியது எப்படி? மனம் திறந்த ஷிவம் துபே

மேலும் படிக்க: IND vs AFG T20I: அரை சதம் விளாசிய ஷிபம் துபே… 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
mejor apuestas diarias seguras
pronosticos doble doble nba apuestas (Dorthy) europa league hoy
esports best online Betting Apps site
gioco online affari tuoi Feel free to visit my web blog … Giocare a Burraco
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

முதல்வர் விஜய், அமைச்சர்கள் குறித்து ஒருமையில் பேச்சு – திமுக MLA துரை.சந்திரசேகரன் சர்ச்சை | ACTPnews.com

‘நைட்டெல்லாம் தூங்க முடியல!’ – அவையில் குமுறும் எம்.எல்.ஏக்கள்; காரணம் என்ன?, |“Couldn’t Sleep All Night!” – MLAs Voice Their Anguish in Assembly; What’s the Reason? | ACTPnews.com

பரந்தூர்: “இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது?" – அண்ணாமலை கேள்வி | ACTPnews.com

'வருங்கால பிரதமர் விஜய்!' கலக குரல் எழுப்பும் அமைச்சர்கள் – காங்கிரஸை சீண்டுகிறதா த.வெ.க? | ACTPnews.com

bono apuestas (Nellie) final del mundial