<p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் 31 கோடி செலவில் புதிய டைட்டில் பார்க் கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.</p>
<p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலத்தில், தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலம், மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்தார். தொழில், முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலத்தில், ரூ 31.00 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 63,000 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இக்கட்டடத்தில் சுமார் 450 முதல் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரிய குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், உட்புற மற்றும் வெளிப்புற குடிதண்ணீர், சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24ஓ7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் உள்ளடக்கிய அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில் புதிய டைட்டில் பார்க் கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு மேற்கொண்டு இருந்தார், அப்போது அங்கு வந்த வானூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி இந்த டைட்டில் பார்க் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. விழுப்புரத்தில் அமைய இருந்த இந்த டைட்டில் பார்க்கினை எனது முயற்சியின் பேரில் இங்கு கொண்டு வந்து அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு கொடுத்தோம் ஆனால் தற்போது இந்த கட்டிடம் வேலை நிறைவடைந்து இன்று திறப்பு விழா நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சிக்கு இப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான எனக்கு எந்த அரசு அதிகாரிகள் சார்பில் எந்த ஒரு தகவலும் கொடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார் பின்னர் அங்கிருந்து தன் ஆதரவாளருடன் வெளிநடப்பு செய்தார்.</p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
sportwetten Here is my homepage; Basketball Wetten strategien
принтер мфу лазерный kyocera мфу kyocera цветной
купить принтер kyocera цветной лазерный принтер kyocera
принтер сканер kyocera принтер kyocera модели
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-
-

கூடலூர்: ஆட்கொல்லி புலி விவகாரம்; 2-வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! – பதற்றத்தில் காவல்துறை! | ACTPnews.com
-

புதுச்சேரி: `மாநில அந்தஸ்துக்காக ராஜினாமா செய்யத் தயார்!' – பேரவையில் சீறிய முதல்வர் ரங்கசாமி | ACTPnews.com
-

Penguin drops Sonia Gandhi’s memoir after she rejected ‘changes | Belonging: A Journey of Love: சோனியா காந்தியின் புத்தகம்: வெளியீட்டுக்கு முன்பே மாறும் பதிப்பகம்! | ACTPnews.com
-

`நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசரா?’ – அடிதடி வழக்கில் நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி! | ACTPnews.com



















Casa De Apuestas Deportivas En EspañA del dia deportivas