"'மிகவும் உயரமாக இருக்கிறாய்; வீட்டுக்கு போ' என்றார்கள்"- ஆரம்ப காலத்தை நினைவுகூர்ந்த அமிதாப் பச்சன்



பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு 80 வயதைக் கடந்த போதிலும் இன்னும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு கோன் பனேகா குரோர்பதி என்ற டிவி நிகழ்ச்சியையும் நடத்திக்கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து இருக்கிறார். சொந்தமாக படங்கள் தயாரித்து கடுமையான கடனாளியாக மாறி அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவர் பாலிவுட்டிற்கு வந்த புதிதில் தான் சந்தித்த சவால்கள் குறித்து அமிதாப்பச்சன் தான் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். “கோன் பனேகா குரோர்பதி 18′ நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்ச்சியில், 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன், ஜந்து குமார், ஷர்மிளா தன்கர் மற்றும் அஸ்மிதா டே ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் அமிதாப்பச்சன் உரையாடியபோது, ​​”விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போது தவறு செய்யும்போதெல்லாம் கடிந்துகொள்ளப்படுவதைப் போலவே, திரைப்படப் படப்பிடிப்புத் தளங்களிலும் அமிதாப் பச்சன் அத்தகைய கண்டிப்புகளை எதிர்கொண்டதுண்டா?” என்று அஸ்மிதா அவரிடம் கேட்டார். அமிதாப் பச்சன்அதற்குப் பதிலளித்த அமிதாப்பச்சன், “நான் நிறைய திட்டு வாங்கி இருக்கிறேன். ஆரம்பத்தில், அவர்கள் எனக்கு எதுவும் தெரியாது. நடிப்பைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ‘நீ மிகவும் உயரமாக இருக்கிறாய், வீட்டிற்குத் திரும்பு’ என்று சொல்வார்கள். அப்புறம் எனக்கு படத்தில் வாய்ப்புகள் கிடைத்ததும், அவர்கள், ‘சரி, சரி, அங்கே நின்று டயலாக்கைச் சொல்லுங்கள்’ என்று சொல்வார்கள். இப்படியா டயலாக் சொல்வார்கள் என்று கேட்டு என்னைத் திட்டுவார்கள், திருத்துவார்கள், மெதுவாக நான் முன்னேறினேன். பொதுவாக, படப்பிடிப்புக்குச் சரியான நேரத்திலேயே செல்ல நான் முயற்சிப்பேன். ஒருமுறை நான் தாமதமாகச் சென்றேன். அப்போது படப்பிடிப்புத் தளத்திற்கு வெளியே இயக்குநர் நின்றுகொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் என்னிடம் சொந்தமாக கார் இல்லாததால், வேறொருவரின் காரில்தான் நான் அங்கு சென்றிருந்தேன். நான் அங்கு சென்றதும் என்னைப் பார்த்த இயக்குனர், படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகக் கூறினார். இங்கிருந்து கிளம்பு என்று சொல்லி, என்னை அங்கிருந்து செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார்,” என்று கூறினார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. К наиболее частым причинам обращения относятся следующие проявления: Дополнительная информация – [url=https://vyvod-iz-zapoya-balashiha15-1.ru/]vyvod-iz-zapoya[/url]

  2. Запой сопровождается повторным приемом спиртного в течение нескольких дней и выраженной абстиненцией при попытке остановиться. Если человек употребляет алкоголь постоянно,…

  3. Первичная консультация помогает определить, какая помощь необходима именно сейчас. Врач-нарколог уточняет продолжительность употребления, количество алкоголя или психоактивных веществ, наличие бессонницы,…

  4. Общаемся без осуждения и давления, сохраняя спокойную атмосферу для пациента и семьи. Подробнее – [url=https://vvyvod-iz-zapoya-kemerovo18.ru/]вывод из запоя вызов Кемерово[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed