இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

ஜனவரி 17 ஆம் தேதி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஜனவரி 18 மற்றும் 19 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் வரும் 20 மற்றூம் 21 ஆம் தேதி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களாக அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஒரு சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கிறது.

காற்று மாசு:

நேற்று போகி பண்டிகை முன்னிட்டு பலரும் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எரித்து கொண்டாடினர். அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் இருப்பதால் போகி கொண்டாட்டத்துடன் சேர்ந்து சென்னை முழுவதும் புகை மூட்டமாக மாறியது. இதனால் சென்னையில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மணலியில் 287 புள்ளிகள் கொண்டு காற்றின் தரம் பதிவானது. இது மிகவும் மோசமான குறியீடாகவும், இந்த காற்று சுவாசிக்க தரமற்றது. அதேபோல பெருங்குடியில் எண்ணூர் 226, அரும்பாக்கம் 207, ராயப்புரம் 195 என பதிவானது.

காற்று தரக்குறியீடு 100 வரை இருந்தால் அது சுவாசிக்க ஏதுவானது. 100 ஐ கடந்து பதிவானால் அது சற்று மாசடைந்துள்ளது என அர்த்தம். காற்று தரக்கூறியீடு 201 முதல் 300 க்கு இடையில் இருந்தால் "காற்று தரம் மோசமாக இருப்பதாகவும்", 301 முதல் 400 இருந்தால் "காற்று தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும்", மற்றும் 401 முதல் 500 இருந்தால் "காற்று தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்" கருதப்படுகிறது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
More original than the recycled takes I keep finding on the topic elsewhere, and a quick look at frostridgeartisanoutlet confirmed…
Вывод из запоя в Санкт-Петербурге требуется, когда длительное употребление алкоголя приводит к выраженному похмельному или абстинентному синдрому, а самостоятельно прекратить…
Капельница на дому подбирается на основе показаний, а не рекламного названия комплекса. Популярные витаминные комплексы подходят не каждому. Определение состава…
Для поездки можно открыть раздел «Контакты»: карта Яндекс помогает найти место, построить маршрут и понять, что находится рядом. Москва —…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

குருகிராமில் இருந்து துவாரகா வரை: சி.ஜே.பி தலைவர்களை டெல்லி காவல்துறை மூன்று தொலைதூர இடங்களுக்கு அழைத்துச் சென்றது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜந்தர் மந்தர் போராட்டத்தை முன்னிட்டு டெல்லி விமான நிலையத்தில் இருந்து சிஜேபியின் அபிஜீத் திப்கே, சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தியா செய்திகள் | ACTPnews.com

மணிப்பூரின் கம்ஜோங்கில் பெண் சுட்டுக்கொலை, குகி-நாகா துப்பாக்கிச் சூடு தொடர்கிறது; விதிக்கப்பட்ட தடைகள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

CEC ஞானேஷ் குமாருக்கு எதிரான CJP எதிர்ப்புக்கு முன்னதாக டில்லி வானத்தை நோக்கி ட்ரோன்கள் செல்கின்றன இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘வெளிப்படையான பலவீனம்’: டிரம்பின் ரஷ்ய டீசல் ஒப்பந்தத்தை சாடுகிறார் Zelenskyy, அது போரை நீடிக்கக்கூடும் என்று எச்சரித்தார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Implementing robust security practices on Avalanche security exchange security starts with completely abandoning vulnerable SMS verification methods in favor of…