சுதந்திர போராட்டத் தியாகி கொடிகாத்த குமரன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருடன் களம் கண்ட சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள். எங்கள் survey முடிவுகளும் அதை உறுதி செய்கின்றன.
தோல்வி பயத்தின் காரணமாகவே முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வீதி வீதியாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் முடிவதற்கு முன்பாகவே எதிர்க்கட்சியினர் புலம்பத் தொடங்கிவிட்டனர். ‘வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை’ என்ற புதிய அரசியலை முதல்வர் விஜய் முன்வைத்துள்ளார். மக்களைத் தெருத் தெருவாகப் போய் நேரடியாகச் சந்திக்கும் அவருடைய இந்த பிரசார முறை மிக முக்கியமானது மற்றும் பாராட்டத்தக்கது.
இதை ‘தோல்வி பயம்’ என்று சொல்வது தவறான புரிதலாகும். இடைத்தேர்தலில் தவெக பணம் கொடுக்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுவது தவறான தகவல். திமுகவைப் பொறுத்தவரை பொய் பிரசாரம் செய்வதிலும், பண விநியோகம் செய்வதிலும் திட்டமிட்டு செயல்படக் கூடியவர்கள். தவெக-வை தேவையில்லாமல் கலங்கப்படுத்த நினைக்கிறார்கள். தவெக தற்போது ‘இந்தியா’ கூட்டணியில் இணைந்துள்ளது. அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் அடுத்தகட்டப் போராட்டங்களிலும் தவெக தலைவர் விஜய் பங்கேற்பார். தவெகவின் வருகை திமுகவுக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

























Worth recognising that the post did not pretend to be the final word on the topic, and a stop at…