வள்ளலார் சபை நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள்! - ஆட்சியர், எஸ்.பிக்கு நீதிமன்றம் `கெடு’ விதித்த பின்னணி  High Court sets deadline for Collector and SP over individuals encroached upon vallalar sabha land

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சத்தியஞான சபையின் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று, வள்ளலாரின் பின்தொடர்பாளர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம், `பல கோடி மதிப்பிலான வள்ளலார் சபைக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலத்தைச் சிலர் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர்.

அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் பெருவெளி ஆக்கிரமிப்பு செய்யப்படுவதைத் தடுக்கும் விதமாக, பெருவெளியைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்” என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

வடலூர் சத்தியஞான சபை

வடலூர் சத்தியஞான சபை

அந்த வழக்கு உயர் நீதிமன்றம் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் மனோகரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில், `பெருவெளியைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்புவது தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட்டு, அதற்கான மதிப்பீடுகளும் இறுதி செய்யப்பட்டுவிட்டன.

ஆனால் சத்தியஞான சபை நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களின் விவரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தான் இருக்கின்றன. அந்தப் பட்டியலை அவர்களிடம் கேட்டிருக்கிறோம். ஆனால் இன்னும் கிடைக்கவில்லை’ என்று கூறப்பட்டது.

அதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் பட்டியலை வழங்க அவகாசம் கேட்டனர்.

Source link


Latest News

View All

  1. У разных людей запой протекает неодинаково. В большинстве случаев первые проблемы связаны с нарушением сна, тревогой, тремором, тошнотой, головного болью…

  2. Общаемся без осуждения и давления, сохраняя спокойную атмосферу для пациента и семьи. Изучить вопрос подробнее – [url=https://kapelnitsa-na-domu-v-moskwe1.ru/]kapelnicy-na-dom-kruglosutochno[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed