டெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். இது குறித்து ஒவ்வொன்றாக காணலாம்!
`ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அறப்போர்!”
விசிக தலைவர் திருமாவளவன்:
“எதிர்க்கட்சிகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகத்தை காப்பதற்காக இங்கு கூடி இருக்கிறோம். ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டுமென்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இந்த அறப்போர் நடந்து வருகிறது. இந்தியாவில் தேர்தல்களில் முறைகேடு நடந்திருக்கிறது என்பதை தேர்தல் ஆணையர்கள் இருவருமே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளால் பொதுமக்கள் கொதித்துப் போய் உள்ளனர். இது பாஜக-வை ஆட்சியில் இருந்து அகற்றும் ஒரு புரட்சியாக வெடித்து இருக்கிறது.”

`மக்கள் உணர்வை தடுக்க முடியாது!’
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்:
“அதிகார திமிரோடு நடந்து கொள்வதால் மக்களின் புரட்சியைத் தடுக்க முடியாது. லத்தி அடி கொடுக்கலாம், கைது செய்யலாம் ஆனால் மக்கள் உணர்வை தடுக்க முடியாது. மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை போய்விட்டது. எஸ் ஐ ஆர் நடவடிக்கையே சட்டத்திற்கு புறமானது. ஒரு வாக்காளரை பட்டியலில் சேர்ப்பது என்பது தேர்தல் ஆணையம் கொடுக்கும் பரிசு ஒன்றும் கிடையாது… அது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமை. ஆனால் அந்த உரிமையை தான் தேர்தல் ஆணையம் கேள்விக்குறியாக்கி வருகிறது.”
`ஒரு நொடிகூட அந்த பதவியில் இருக்க தகுதி இல்லை!’
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் டி ராஜா:
“நாட்டில் இவ்வளவு பிரச்னைகள் போய்க்கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. டெல்லி காவல்துறை நேரடியாக மத்திய உள்துறை அமைச்சரின் கீழ் வருகின்றது. ஆனால் டெல்லி காவல்துறை எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கை உள்ளிட்டவற்றைத்தான் செய்கிறது.
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் இனி ஒரு நொடிகூட அவர் அந்த பதவியில் இருக்க தகுதியை கொண்டிருக்க வில்லை. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையென்றால் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.”

























Adding to the bookmarks now before I forget, that is how good this is, and a look at blazeclose confirmed…