ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 60வது போட்டியில் இன்று புனேரி பல்டன் அணி, மும்பையில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா ஸ்டேடியத்தில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்குகிறது.

புனேரி பல்டன் vs தமிழ் தலைவாஸ்:

கடந்த 3ம் தேதி உபி யோதாஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு புனேரி பல்டன் அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. உபி யோதாஸ் அணிக்கு எதிரான போட்டியில் புனேரி பல்டன் அணி 40-31 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இது புரோ கபடி லீக் சீசன் 10ன் புனேரி பல்டன் அணியின் எட்டாவது வெற்றியாகும்.

மறுபுறம், தமிழ் தலைவாஸ் அணி கடந்த டிசம்பர் 31ம் தேதி பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 37-38 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது.

புனேரி பல்டன் vs தமிழ் தலைவாஸ் அணிகள் இதுவரை நேருக்கு நேர்:

ப்ரோ கபடி லீக் வரலாற்றில் புனேரி பல்டன் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் 9 முறை மோதியுள்ளன. இதில், தமிழ் தலைவாஸுக்கு எதிரான 4 வெற்றிகளுடன், புனேரி பல்டன் அணி முன்னிலையில் உள்ளது. தமிழ் தலைவாஸ் 3 முறை வென்றுள்ள நிலையில், 2 போட்டிகள் டையில் முடிந்தது.

கடைசியாக சீசன் 9ல் புனேரி பல்டன் vs தமிழ் தலைவாஸ் ஆட்டத்தில் 39-37 என்ற கணக்கில் புனேரி பல்டன் அணி வெற்றி பெற்றது.

8 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியுடன், புனேரி பல்டன் 41 புள்ளிகளுடன் ப்ரோ கபடி லீக் சீசன் 10 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மறுபுறம், தமிழ் தலைவாஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் மொத்தமாகவே 13 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.

புனேரி பல்டன் vs தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள்

புனேரி பல்டன்

ப்ரோ கபடி லீக்கில் இந்த 10வது சீசனில் புனேரி பல்டான் அணிக்காக மோஹித் கோயட் 9 போட்டிகளில் 65 ரெய்டு புள்ளிகளை குவித்து சிறந்த ரைடராக ஜொலிக்கிறார். இவர் உபி யோதாஸ் அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் 4 ரெய்டு புள்ளிகளை எடுத்தார்.

இதற்கிடையில், புனேரி பல்டன் அணிக்காக ப்ரோ கபடி லீக் 10 இல் 9 போட்டிகளில் 29 டிபென்ஸ் புள்ளிகள் பெற்ற அபினேஷ் நடராஜன் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அதேபோல், இதே அணியை சேர்ந்த அஸ்லாம் இனாம்தார் இதுவரை 71 புள்ளிகள் குவித்து அணியில் முதலிடத்தில் உள்ளார்.

தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸைப் பொறுத்தவரை அஜிங்க்யா பவார் முக்கிய ரெய்டராக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 9 போட்டிகளில் 63 ரெய்டு புள்ளிகளை அள்ளியுள்ளார். இதில் 9 டூ ஆர் டை ரெய்டு புள்ளிகளும் அடங்கும்.

சாஹில் குலியா தமிழ் தலைவாஸ் அணிக்காக டிபென்ஸ் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 9 போட்டிகளில் 33 டிபென்ஸ் புள்ளிகளை எடுத்துள்ளார். அதேசமயம், ஹிமான்ஷு 5 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலிக்கிறார்.

இந்த போட்டியில் படைக்கவிருக்கும் மைல்கல்கள்:

தமிழ் தலைவாஸின் அஜிங்க்யா பவார் ப்ரோ கபடி லீக்கில் 400 ரெய்டு புள்ளிகளை எட்ட 7 ரெய்டு புள்ளிகள் தேவையாக உள்ளது.

ப்ரோ கபடி சீசன் 10ஐ நேரலையில் எங்கே பார்ப்பது?

ப்ரோ கபடி சீசன் 10 இலிருந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்பிலும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this slowly in the morning before opening email, and a stop at garnetharborartisantraders extended that protected attention, content that…
torzon darknet market torzon darkweb link
Домашний формат не означает упрощенного подхода. Врач должен учитывать возраст, длительность зависимости, наличие хронических заболеваний, ранее проведенное лечение, препараты, которые…
Thanks for laying this out in a way that someone newer to the topic can follow, and a stop at…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

திலீப் கோஷ்: ‘அது என்ன சாதிக்கும்?’: மம்தாவின் டெல்லி விஜயம் குறித்து பா.ஜ.க.வின் கோஷ், எஸ்.ஐ.ஆர் மீது இந்திய அணி பிரெஸ் மீட் தேடுகிறது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

பாகிஸ்தானின் பயங்கரவாத அரக்கர்கள் இப்போது அதன் சொந்த கொல்லைப்புறத்தில் அழிவை ஏற்படுத்துகிறார்கள்: ஐநாவில் இந்தியா | இந்தியா செய்திகள் | ACTPnews.com

EC நியமனச் சட்டம் மீதான பிரிந்த தீர்ப்பை திரும்பப் பெறக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய உள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா: ரூபாய் மதிப்பு குறைவாக இருக்கலாம், சந்தைகள் பகுத்தறிவற்றதாக இருக்கலாம்: ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா | இந்தியா செய்திகள் | ACTPnews.com

25 ஆண்டுகால ஆட்சி: பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, உலகத் தலைவர்கள், கூட்டாளிகள் வாழ்த்து | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Felt mildly happier after reading, which sounds silly but is true, and a look at gildedcoveretaildistrict extended that small mood…