<h2><strong>ப்ரோ கபடி லீக்:</strong></h2>
<p>ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. மொத்தம் 12 அணிகள் களமிறங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதன் அடிப்படையில் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினை இழந்த அணிகளில் ஒன்றாக உள்ள அணி தமிழ் தலைவாஸ். தமிழ் தலைவாஸ் அணி இன்று அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி தனது கடைசி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் விளையாடியது.</p>
<p>இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியை 37 புள்ளி கணக்கில் வீழ்த்தி கடைசி வெற்றியை பதிவு செய்துள்ளது.</p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






















So, It gave me some useful insights. glad I found this honestly.