சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

கேள்வி கேட்கும் மீனா:

மீனா ”சொல்லுடா உன்னை யாருடா அடிச்சா?” என சத்யாவிடம் கேட்கிறார். பின் மீனா சத்யாவை அடிக்கிறார். வட்டி பணம் வாங்க சென்ற போது முத்து மாமா தன் கையை முறுக்கியதாகக் கூறுகிறார் சத்யா. ”சத்யா பொய் சொல்லாத” என்கிறார் மீனா. ”எவ்ளோ சொல்லி பார்த்தேன்” மாமா கேட்கல என்கிறார் சத்யா. அவரு குடிச்சிருந்தாருனு நினைக்குறேன் ஒரு மாதிரி ஸ்மெல் வேற வந்துச்சி” என்கிறார் சத்யா.

மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டாரே என மீனாவின் அம்மா அழுகிறார். மீனா கார் செட்டுக்கு சென்று செல்வத்தை திட்டுகிறார். முத்து எழுந்து வந்து ”என்னவாம்” எனk கேட்கிறார். ”என் தம்பி கையை உடைக்கும் போது இப்படிதான் குடிச்சி இருந்திங்களா? கொஞ்சம் கூட மனசாட்சியா இல்லையா உங்களுக்கு” எனக் கேட்கிறார் மீனா. ”குடி மட்டும் போதும் உங்களுக்கு அப்படித்தானே” எனக் கேட்கிறார் மீனா.

அழும் மீனா:

”உங்க புத்தி மாறவே மாறாது” என சொல்லிவிட்டு மீனா அங்கிருந்து வீட்டிற்குச் செல்கிறார். மீனா வீட்டிற்கு சென்று அழுது கொண்டிருக்கிறார். ஸ்ருதி அவருக்கு ஆறுதல் கூறுகிறார். ”ஆனா இவ சொல்ற காரணம் தான் நம்ப முடியல வட்டி சிட்டினு ஏதேதோ காரணம் சொல்லிக்கிட்டு இருக்கா” என்கிறார் விஜயா. உடனே ரோகினி அதிர்ச்சி அடைகிறார். ”நம்ப வேற சிட்டிக்கிட்ட கடன் வாங்கி இருக்கோம், அவனை வேற இந்த மீனா அவங்க தம்பிக்கு தெரிஞ்சி இருக்கு” என மனதிற்குள் நினைக்கின்றார்.

முத்து வீட்டிற்கு வந்ததும் அண்ணாமலை, ரவி ஆகியோர் சத்யாவை அடித்தது குறித்து கேட்கின்றனர். ஆனாலும் முத்து உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார். “கண்டவன் கூட சேர்ந்து சுத்திக்கிட்டு திரிஞ்சா இப்டிதான் ஆகும்” என்கிறார் முத்து. ”நான் என்ன கேட்குறேன் நீ என்ன பதில் சொல்ற? அவன் கைய ஏன் உடச்ச” எனக் கேட்கிறார் அண்ணாமலை. ”வேண்டாம் மாமா அவரு கிட்ட எதுவும் கேட்க வேண்டாம். நாங்க ஏழைங்க தானே, எங்கள எல்லாம் அடிச்சா என்ன கேட்க நாதியா இருக்கு”என மீனா அழுகிறார்.

”எனக்கு என்னமோ இவன் அவனுக்கு காசு கொடுத்து இருப்பான், அதை திருப்பி கேட்க போய் தான் பிரச்சனை ஆகி இருக்கும்னு நினைக்கின்றேன்” என்கிறார் விஜயா. ”அவன் ஏற்கெனவே ஒருமுறை நம்ம வீட்ல பைக்க திருடுனவன் தானே இப்போ என்ன பண்ணி வச்சானோ” என்கிறார் மனோஜ். ”அவன் இப்போ ஒழுங்கா படிக்குறான். பார்க்ல போய் உட்கார்ந்து தூங்கல” என்கிறார் மீனா. அண்ணாமலை சத்யாவிடம் முத்துவை மன்னிப்பு கேட்கச் சொல்கிறார். ”முடியாதுப்பா” எனச் சொல்லுகிறார் முத்து. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
A clear cut above the usual noise on the subject, and a look at birchharbormarketplace only made that gap wider…
Generally I find the content on similar topics frustrating in specific ways and this post avoided all of them, and…
A clear cut above the usual noise on the subject, and a look at birchharbormarketplace only made that gap wider…
Worth recognising that the post did not pretend to be the final word on the topic, and a stop at…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

கிராமப்புற சாலை திட்ட டிபிஆர்களை ஆய்வு செய்ய AI கருவியை அரசாங்கம் பயன்படுத்துகிறது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

எஃப்பிஐ கேங்ஸ்டர் கோல்டி பிராரை பத்து மோஸ்ட் வாண்டட் ஃப்யூஜிடிவ்ஸ் பட்டியலில் சேர்த்தது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

UNFPA அறிக்கை: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதார பாதுகாப்பின்மை, குறைந்த ஊதியம், வறுமை மற்றும் கடன் ஆகியவை சிறந்த வாழ்க்கைக்காக வெளியேறுவதற்கான காரணங்களாகக் குறிப்பிடுகின்றன. இந்தியா செய்திகள் | ACTPnews.com

குறைந்த ஏற்றுமதி, சீனப் போட்டி ஆகியவற்றுக்கு மத்தியில் ரஷ்ய கச்சா எண்ணெயின் இந்திய இறக்குமதி மேலும் குறையும் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

காந்திநகர் உள்ளாட்சித் தேர்தல்: காவல்துறை, தேர்தல் ஆணையத்தை தவறாகப் பயன்படுத்தியதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியதால் பாஜகவுக்கு பதிலடி | இந்தியா செய்திகள் | ACTPnews.com
You May Have Missed

குவாடலூப் மலைகள் தேசிய பூங்கா: டெக்சாஸ் எண்ணெய் புவியியலாளர் 1921 இல் மெக்கிட்ரிக் கேன்யனை முதன்முதலில் பார்த்தார், பின்னர் ஒரு தனியார் பின்வாங்கலுக்காக நிலத்தை வாங்கினார்; 38 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் 4,942 ஏக்கர் மற்றும் அவரது வீட்டை நன்கொடையாக வழங்கினார், குவாடலூப் மலைகள் தேசிய பூங்காவை உருவாக்க உதவினார். | ACTPnews.com

கலிபோர்னியாவின் முன்னாள் கான்கார்ட் கடற்படை ஆயுத நிலையத்தில் 2,422 ஏக்கரை மறு அபிவிருத்தி செய்வதற்கான விதிமுறைகளுக்கு அமெரிக்க கடற்படை ஒப்புதல் அளித்துள்ளது; கைவிடப்பட்ட இராணுவ தளம் ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கி நகரும் போது மாஸ்டர் டெவலப்பர் $44.6 மில்லியன் மற்றும் வட்டியை செலுத்துவார் | ACTPnews.com

Just want to acknowledge that the writing here is doing something right, and a quick visit to kettlewillowmarketstudio confirmed the…