மறைந்த ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அவரது தயாரிப்பில் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை, தி.நகரில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சரும் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:

“ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து நம் எல்லாரையும் பிரிஞ்சிருக்கார் உத்தமர் ஆர்.எம்.வீரப்பன் சார் அவர்கள். அமரர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா, அரசியல் வாழ்க்கை என அனைத்திலும் அவரது வலது கையாக இருந்தவர் ஆர்.எம்.வி சார்.

அவரால் உருவாக்கப்பட்ட அவருடைய பல சிஷ்யர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி கல்வி நிறுவன அதிபர்களாகி பேரும் புகழும் பணத்துடனும் இப்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.எம்,வீரப்பன் எப்பவும் பணத்துக்கு பின் போனவர் அல்ல. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. அண்ணா சொன்னது போல் அதனை கடைபிடிச்சு வாழ்ந்தவர். எனக்கும் ஆர்.எம்.வீரப்பனுக்கும் இருந்த நட்பு மிகவும் ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. இப்போது அவர் நம் கூட இல்லை என்பதால் இதை சொல்லவில்லை. என் வாழ்நாளில் நான் அவரை மறக்கவே முடியாது.  அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" எனப் பேசியுள்ளார்.

Source link

Latest News

View All

1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed