ஐபிஎல் 2024ன் 19 வது போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும். இந்த சீசனில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3லிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் ஏமாற்றம் அளித்து வருகிறது.

இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் 3 வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 போட்டிகளில் 1 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.

பிட்ச் எப்படி..?

ஜெய்ப்பூரில் உள்ள சவாய்மான் சிங் மைதானத்தின் பிட்சானது பொதுவாக பேட்டிங்கிற்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. எனவே, இன்றைய போட்டியில் இரு அணிகளும் அதிக ரன்களை அடித்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கலாம். பந்து நல்ல வேகத்துடனும், துள்ளலுடனும் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும். இந்த சீசனில் இதுவரை இங்கு இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி 193 ரன்களையும், இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணி 185 ரன்களையும் எடுத்திருந்தது. எனவே, முதலில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது. இந்த மைதானத்தில் ஐபிஎல்லில் 54 ஆட்டங்களில் சேஸிங் அணி 34-ல் வெற்றி பெற்றுள்ளது. ஜெய்ப்பூரில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 160 ஆகும்.இந்த மைதானத்தில் இதுவரை எந்த அணியும் ஐபிஎல்லில் 200 ரன்களை எட்டவில்லை.

ஜெய்ப்பூரில் கடந்த 10 போட்டிகளின் சாதனை

போட்டிகள்

10

முதலில் பேட்டிங் செய்து வெற்றி

5

இரண்டாவது பேட்டிங் செய்து வெற்றி

5

சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்

175

சராசரி முதல் இன்னிங்ஸ் வெற்றி ஸ்கோர்

181

சராசரி பவர்பிளே ஸ்கோர்

50

சராசரி டெத் ஓவர் ஸ்கோர்

50

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது. அதில் அதிகபட்சமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

விளையாடிய மொத்த போட்டிகள்: 30

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 15 வெற்றி
ராஜஸ்தான் ராயல்ஸ் : 12 வெற்றி
முடிவு இல்லை: 2
கைவிடப்பட்டது: 1

ஜெய்ப்பூர் ஸ்டேடியத்தில்..

விளையாடிய போட்டிகள்: 8

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 4 வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ்: 4 வெற்றி

பெங்களூரு ஸ்டேடியத்தில்..

விளையாடிய போட்டிகள்: 10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 3 வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ்: 4 வெற்றி

முடிவு இல்லை: 2

கைவிடப்பட்டது: 1

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்): ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்/கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பர்கர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி): விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), ரஜத் படிதார், அல்ஜாரி ஜோசப், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ், மயங்க் டாகர், யாஷ் தயாள்.

Source link

Latest News

View All

1. Сломался пуль от кондиционера? пульт для климатической системы универсальные и оригинальные модели для разных марок климатической техники. Подберите совместимый пульт…

2. Проблемы с лверным замком? мастер открыть входную дверь специалист определит причину блокировки, подберет подходящий способ открытия и при необходимости выполнит…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed