ஆர்.எஸ்.மங்கலம் அருகே உடல் உறுப்பு தானம் கொடுத்தவருக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர் எஸ் மங்கலம் தாலுகா செங்கமடை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் முருகன், உறவினரான ராதாகிருஷ்ணன் கடந்த 22ஆம் தேதி ராமநாதபுரத்திற்கு உறவினர் ஒருவர் இறப்பிற்கு சென்று திரும்பியபோது, இரவில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சோழந்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தனர்.
இருவரையும் முதல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முருகன் சிகிச்சை பலனளிக்காமல் மூளை சாவு அடைந்துள்ளார். அவரது உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்துள்ளனர். அதன் அடிப்படையில் அவரது நேற்று உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முருகனின் உடல் அவரது சொந்த ஊரான செங்கமடைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அவரது உடல் இறுதிச் சடங்குகள் செய்ய எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்யும் பணிகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் எறியூட்டப்பட்டது. இறந்த முருகனுக்கு கனகாம்பாள் என்ற மனைவியும் நந்தினி. நதியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அரசு மரியாதை அறிவிப்புக்குப்பின் உடல் உறுப்பு தானம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சுவாமிநாதன், வட்டார மருத்துவர் முனீஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில் ஆர் எஸ் மங்கலம் காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் பாஸ்கரன் இறுதி மரியாதை செலுத்தினார்.

























A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…