Prem Keetanu Movie

[ad_1]

பாலிவுட் தற்போது மற்றுமொரு ஹிட் படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறது. இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென், மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ப்ரேமலு’ திரைப்படம் சென்சேஷனல் ஹிட் ஆகியிருந்தது.

Prem Keetanu Movie

‘ஜென்-ஜி’களின் கதையை, ‘ஜென்-ஜி’களுக்காகக் குறிவைத்து எடுக்கப்பட்டிருந்தது அந்தப் படம்.

இந்தப் படம் 2024-ம் ஆண்டு வெளியாகி, அந்த ஆண்டின் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றது.

இப்படியான பெரிய ஹிட் படங்களைக் கண்டதும், பாலிவுட் செய்யும் விஷயம் ரீமேக்தான். ஆனால், சில நேரங்களில் பாலிவுட் செய்த ரீமேக்குகள் வெற்றிப் படங்களாகவும் மாறியிருக்கின்றன.

பல நேரங்களில் தோல்விப் படங்களாகவும் மாறியிருக்கின்றன. ‘ப்ரேமலு’ படத்தின் இந்தி ரீமேக் படம் ‘ப்ரேம் கீட்டனு’ என்கிற தலைப்பில் உருவாகியிருக்கிறது.

இந்த ரீமேக் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது.

Premalu
Premalu

‘ப்ரேமலு’ படத்தின் கதையிலிருந்து சில விஷயங்களை மாற்றியிருக்கிறார்கள். அந்தப் படத்தின் கதை ஹைதராபாத் பின்னணி, ஐடி பணிச்சூழல் என்பதாக நகரும்.

ஆனால், இந்த இந்தி ரீமேக்கான ‘ப்ரேம் கீட்டனு’ படத்தில், கதையைக் கல்லூரி பின்னணியில் அமைத்திருக்கிறார்கள். அத்தோடு காட்சிகளும் அதற்கேற்ப மாற்றப்பட்டதால், ரசிகர்கள் வருத்தமடைந்து பதிவிட்டு வருகிறார்கள்.

நஸ்லென் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் வீர் பஹாரியா நடிக்கிறார். இவர் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன். மமிதா பைஜூ கதாபாத்திரத்தில் நடிகை ஆசிஃபா சையத் நடிக்கிறார்.

இந்த இந்தி ரீமேக் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்திக்கு ரீமேக் வெர்ஷன் வருவதால், ஜியோ சினிமா தளத்திலிருந்து ‘ப்ரேமலு’ படத்தைத் தற்காலிகமாக நீக்கியிருக்கிறார்கள்.

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed