இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக, அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார் எனக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
அமித் ஷாவின் நிழலாக இருந்து பல்வேறு மாநிலத் தேர்தல்களில் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்கிடையில், புதிய வாக்காளர்களை இணைக்கும் படிவம் 6-ல் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் விவாதமானது.
இந்த நிலையில், “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் ஆணைய அமைப்பின் அரசியலமைப்பு அதிகாரங்களைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தினாரா?’ என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், “மாற்றியமைக்கப்பட்ட படிவம் 6-க்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தப் படிவத்தைத் திருத்தியது யார் என்பதை அறிய விரும்புகிறோம். இது தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இந்த விவகாரம் ஆழமாக ஆய்வு செய்யப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தலைமைத் தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான முடிவுகள் தொடர்பான சர்ச்சைகள், எதிர்க்கட்சிகளின் போராட்டம், மாணவர்களின் போராட்டம் என ஞானேஷ் குமாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

























Glad the writer did not feel compelled to cover every possible angle of the topic, focus is a virtue, and…