Petrol Diesel Price Today, March 18: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும் இன்றி,  நேற்றைய நிலையிலேயே தொடர்கிறது.
மாறாதா பெட்ரோல்,டீசல் விலை:
அத்தியவாசியப் பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய, பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதாவது, சுமார் 660 நாட்களுக்குப் பிறகு கடந்த 15ம் தேதியன்று பெட்ரோல் டீசல் விலையில் தலா 2 ரூபாய் குறைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, நான்காவது நாளாக அவற்றின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34-ஆகவும் தொடர்கிறது.  எரிபொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயிக்கிறது என்றாலும், 660 நாட்களாக மாறாமல் இருந்த விலை தேர்தல் நெருக்கத்தில் மாற்றமடைந்துள்ளது. கொரோனா காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக சரிந்தது. உக்ரைனுக்கு எதிரான போரை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்தும் இந்தியாவிற்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அப்போது கூட எரிபொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: PM ModI TN Visit: பிரதமர் மோடி கோவையில் இன்று ரோட் ஷோ.. பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் குவிப்பு..
எரிபொருள் விலை நிர்ணயம்:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு, எரிபொருள் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும், எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறையும் மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றபோது, பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றி அமைக்கலாம் என்ற நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.  இதனால், உச்சபட்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110 வரை விற்பனையானது, வாகன ஓட்டிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இது அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுத்தது.

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed