மனைவியுடன் தேஜ் பிரதாப்

பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் மகன் தேஜ் பிரதாப் தனது பெற்றோரிடமிருந்து விலகி இருக்கிறார். அதோடு தனது சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கு எதிராகவும் அரசியல் செய்கிறார்.

ஐஸ்வர்யா ராய் என்ற பெண்ணைத் திருமணம் செய்து சில மாதங்களில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதோடு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து அவரை லாலு பிரசாத் யாதவ் கட்சியில் இருந்தும் குடும்பத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

தேஜ் பிரதாப் யாதவ் ‘ரைஸ் அண்ட் ஃபால்’ (Rise and Fall) எனும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் சக போட்டியாளர்களான நிஹாரிகா மற்றும் ராஜ் குரோவருடனான உரையாடலின்போது தேஜ் பிரதாப் யாதவ் தனது பிரச்னையான திருமணம் மற்றும் மனைவி ஐஸ்வர்யா ராயிடமிருந்து விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருப்பது பற்றி மனம் திறந்து பேசினார்.

மனைவியுடன் தேஜ் பிரதாப்

அதில், ”எங்களுக்குத் திருமணமாகி 3 மாதத்தில் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அதிகாலை வரை பார்ட்டிகளுக்கு செல்வார். நாங்கள் இருவருமே வெவ்வேறு விதமானவர்கள். வற்புறுத்தலின் பேரில்தான் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். அப்போது நான் பீகாரின் சுகாதார அமைச்சராக இருந்தேன். எனக்கு வீட்டுக்குச் செல்லவே தோன்றவில்லை.

சில சமயங்களில் என் நண்பரின் வீட்டில் தங்கினேன். வேறு சில சமயங்களில் வேறு இடங்களுக்குச் சென்றேன். ஆனால், அவர் என்னை வீட்டை விட்டு சீக்கிரம் வெளியேற அனுமதிக்க மாட்டார். எனது பெற்றோர் முன்னிலையில் என் மனைவி கத்துவார். நான் காலை 6, 7 மணிக்குப் பூஜை செய்வேன். அது அவளுக்குப் பிடிக்கவில்லை, பூஜை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அதிகாலை 4, 5 மணி வரை பார்ட்டிகளுக்குச் செல்வார்.

நான் காலையில் சட்டமன்றத்திற்குச் சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தால், படுக்கை அறையில் ஒரு பையனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு முன்னாள் காதலன் ஒருவர் இருக்கிறார். அவருடன் சாட்டிங் செய்வார். அவருக்கு அவள் இதயத்தைச் செய்தியாக அனுப்புவாள். அவள் அவனுக்கு எல்லாவற்றையும் அனுப்பிக்கொண்டிருந்தாள்.

நான் அதை அனைத்தையும் தூரத்திலிருந்தே பார்த்தேன். ஒவ்வொரு முறையும் எங்களுக்குள் சண்டை நடக்கும்போது அதனை வீடியோவாக எடுத்துக்கொண்டேன். அதனை ஆதாராமாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளேன்.

ஆண்கள் எப்போதும் தவறு செய்வதில்லை. பெண்கள்தான் தவறு செய்கிறார்கள். சண்டையின்போது மக்கள் குரலை உயர்த்தினால் இப்போதும் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. அதனால்தான் சண்டை நடக்கும்போதெல்லாம் நான் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

தேஜ் பிரதாப் யாதவ், தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் மூத்த மகன் ஆவார்.

அவர் 2018ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் என்பவரை மணந்தார். திருமணம் விரைவில் கடுமையான சிக்கல்களைச் சந்தித்தது. மேலும் தேஜ் பிரதாப் சில மாதங்களுக்குள் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். தம்பதியரின் பிரிவு பரவலாக குடும்பச் சர்ச்சையாக மாறியது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதிய கட்சியைத் தொடங்கிய தனது தந்தையின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தினார்.

Source link


Latest News

View All

  1. Сам факт наличия лекарства или ранее оформленного назначения не означает, что капельницу можно ставить без повторной оценки здоровья. Перед каждым…

  2. Абстинентный синдром обычно начинается после снижения дозы или полного отказа от спиртного. Его характер зависит от стадии алкоголизма, стажа употребления,…

  3. Рекомендации строятся вокруг состояния человека, а не по универсальному шаблону для всех случаев. Изучить вопрос подробнее – [url=https://narkologicheskaya-klinika-moskva15-3.ru/]нарколог бесплатно москва[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed