இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசியிருக்கிறார்.
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கும் நோக்கில் சென்னை வாழ் நெல்லை மக்கள் ஏற்பாட்டின் பேரில், நெல்லைக்கு நேரடியாக சென்று சௌமியா அன்புமணி, தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலக்கும் குறுக்குத் துறை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “ஆளுங்கட்சிக்கு எதிராக இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த கோரிக்கையை மற்ற கட்சிகள் ஏற்காமல், தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். இதனால் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை பாமக எடுத்திருக்கிறது.
பாமக கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறது. இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களில் பொது வேட்பாளர் நிறுத்தி இருந்தால் பாமக நிச்சயம் பிரச்சாரத்திற்கு சென்றிருக்கும்.
இதற்காக கூட்டணியில் இல்லை எனக் கூறுவது தவறான தகவல். கூட்டணியில் இருப்பது வேறு, தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

























Picked something concrete from the post that I will use immediately, and a look at coaststonegalleria added another concrete piece,…