Nawazuddin Siddiqui: 4 ஆண்டு விவாகரத்து பஞ்சாயத்து முடிவு: குடும்பத்துடன் மீண்டும் இணைந்த 'பேட்ட' பட வில்லன் நடிகர்!

நடிகர் நவாசுதீன் சித்திக் உடன் மீண்டும் திருமன வாழ்க்கையை தொடர இருபதாக அவரது மனைவி ஆலியா சித்திக் கூறியுள்ளார்.

நவாசுதீன் சித்திக்

இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக்கின் திருமண வாழ்க்கை பலவித திடீர் திருப்பங்களால் நிறைந்தது. தான் சினிமாவில் ஒரு நடிகனாக வளர்ந்து வந்த காலத்தில் அஞ்சலி என்பவரை காதலித்து வந்ததாகவும் இருவரும் திருமணத்திற்கு முன்பு லிவ் இன் ரிலேஷனஷிப் இல் சேர்ந்து இருந்ததாகவும் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தக் காலத்தில் தாங்கள் இருவருக்கும் இடையில் தொட்டதற்கெல்லாம் சண்டை வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு முறை சண்டை வருமோதும் அஞ்சலி கோபித்துக் கொண்டு செல்ல அவரிடம் மன்னிப்பு கேட்டு பின்னாடியே நவாசுதீன் செல்வது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது.

முதல் திருமணம்

அப்படி ஒரு முறை சண்டையில் அஞ்சலி கோபித்துக் கொண்டு செல்ல நவாசுதீன் அவரைப் போக விட்டுவிட்டார். அதற்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமல் பிரேக் அப் இல் முடிந்தது இந்த காதல். இதனைத் தொடர்ந்து நவாசுதீனின் தாயார் அவருக்கு ஷீபா என்கிற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். கடந்த 2010ஆம் ஆண்டு ஷீபா நவாசுதீன் சித்திக்கிடம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னைக் கொடுமை படுத்தியதாக ஷீபா நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார். விவாகரத்தைத் தொடர்ந்து நவாசுதீன் அமெரிக்காவைச் சேர்ந்த சூஸன் என்கிற பெண்ணை சிறிது காலம் டேட் செய்தார். அவரிடம் இருந்து பிரிந்து பின் நிஹாரிகா என்கிற மிஸ் இந்தியா டைட்டிலை வென்ற நடிகையுடன் அவரது காதல் வாழ்க்கை தொடர்ந்தது.

காதலியுடன் திருமணம்

இதன் பின், தனது முதல் காதலியான அஞ்சலியுடன் மீண்டும் இணைந்தார் நவாஸுத்தின். தனது பெயரை அஞ்சலியில் இருந்து இஸ்லாமிய பெயரான ஆலியாவாக மாற்றியபின் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இந்தத் தம்பதியினருக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். 10 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஆலியா நவாசுதீனிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பதிவு செய்தார்.

நவாஸின் முதல் மனைவி ஷீபா வைத்த அதே குற்றச்சாட்டையே ஆலியாவும் அவர்மேல் வைத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த விவாகரத்துக்காக நீதிமன்றத்திற்கு இருவரும் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதனிடையில் ஒருவருடன் புகைப்படத்தைப் பகிர்ந்து தான் தனது உண்மையான காதலை கண்டுபிடித்து விட்டதாக ஆலியா சூசகமாகப் பதிவிட்டிருந்தார்.

சரி ஒரு முடிவுக்கு வந்ததே என்று ரசிகர்கள் நினைக்கும்போது கடந்த சில நாட்கள் முன்பு தனது 14 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார் ஆலியா. இந்தப் பதிவில் நவாசுதீனை ‘ஒன் அண்ட் ஒன்லி லவ்’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவைத் தொடர்ந்து தற்போது தனது கணவருடன் தான் மீண்டும் திருமண வாழ்க்கையை தொடர இருப்பதாகவும், தங்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆலியா கூறியுள்ளார்.

" மூன்றாம் நபர் ஒருவரால் தான் எங்களுக்கு இடையில் பிரச்சனைகள் வந்தன. இப்போது அந்த நபர் இல்லை. எங்களது குழந்தைகளுக்காக நாங்கள் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளோம். எங்கள் இருவருக்கும் இடையில் நிறைய கெட்ட நினைவுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் நிறைய அன்பான தருணங்களும் இருக்கின்றன. நாங்கள் அந்த இனிமையான தருணங்களையே எடுத்துக்கொண்டு திருமண வாழ்க்கையை தொடர முடிவு செய்திருக்கிறோம்” என்று ஆலியா கூறியுள்ளார்.

Source link