Minister Sampathkumar clarifies that moral responsibility for the omission of Periyar and Ambedkar names - ’பெரியார், அம்பேத்கர் பெயர் விடுபட்டதற்கு நானே தார்மீக பொறுப்பு’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!


கோவை கவுண்டர்மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சம்பத்குமார்,  பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சம்பத்குமார், “30, 40 வருடங்களாக வீட்டுமனை பட்டா பெறாமல் போராடி வந்த மக்களுக்கு அவர்களது பகுதிகளுக்கே சென்று பட்டா வழங்கும் பணிகள் தற்போது துவங்கி உள்ளது. முதல் கட்டமாக 500 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவுலகத்தின் உட்புற பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் 100% நிறைவடைந்த பிறகு முதல்வரால் அது திறந்து வைக்கப்படும்” என்றார்.

பிற்படுத்தப்பட்டோர் மாநில கோரிக்கை கொள்கை குறிப்பில் அம்பேத்கர், பெரியார், நேரு பெயர்கள் விடுபட்டதற்கு விசிக கண்டனம் எழுப்பியுள்ளது குறித்தான கேள்விக்கு, ”தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்கள். அவர்களுடைய வழிகாட்டுதலில் தான் எங்களுடைய செயல்பாடுகள் உள்ளது. அவர்கள் பெயர்கள் விடுபட்டதற்கு தார்மீக பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். அது குறித்து மறுப்பிரசுரம் வழங்கக்கூடிய பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. வரலாற்றில் மக்களுக்காக உழைத்த தலைவர்களை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம்” என பதிலளித்தார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed