Manju Warrier : திருச்சியில் நடிகை மஞ்சுவாரியர் பயணம் செய்த காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் தேர்தல் பறக்கும் படையினர் இரவு, பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கார்களிலும் தற்போது சோதனை செய்யப்படுகிறது. 
வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் கவனமுடன் செயல்பட்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியர் திருச்சி பகுதியில் சென்றுகொண்டிருந்தார். வழக்கம்போல  அந்த பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

திருச்சியில் நடிகை மஞ்சுவாரியார் காரில் சோதனை- ரசிகர்கள் செல்ஃபி#Manjuwarrier #Viral #trichy #Tamilnadu pic.twitter.com/AUAckrBDt8
— ABP Nadu (@abpnadu) April 7, 2024

அப்போது அவரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். முழுமையான சோதனை முடிந்த பின்னர் நடிகை மஞ்சு வாரியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஒருபக்கம் சோதனை நடந்த நிலையில், மறுபக்கம் மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர். சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழ்நாட்டில் ரூ.192 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது. 
மஞ்சு வாரியரின் சினிமா பயணம்
நடிகை மஞ்சு வாரியரின் பூர்விகம் கேரளா என்றாலும் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தான் பிறந்தார். மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மஞ்சு வாரியர், சாட்சியம் என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் நடிக்க தொடங்கினார். தமிழில் 2019 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த அசுரன் படத்தில் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அஜித் நடித்து துணிவு படத்தில் ஹீரோயினாக இருந்தார். 

மேலும் படிக்க: Astrologer on PM Modi: அடுத்த முறையும் மோடிதான்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பார் – ஜோதிடர் போட்ட ட்வீட்

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Обзоры автомобилей https://viewport.com.ua освещает новости и обзоры. Узнавайте подробности.

  2. Екіпірування знайдеться і для спокійної їзди по місту, і для бездоріжжя. Головним для мене лишається походження деталі, бо однакові на…

  3. Автомобильные технологии https://viewport.com.ua собирает новости и обзоры. Читайте автомобильные статьи.

  4. Стальные материалы https://inox.com.ua применяется для различных проектов. Изучайте характеристики.

  5. Изделия из стали https://inox.com.ua подходит для различных проектов. Выбирайте материалы.

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed