தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2006-ம் ஆண்டு கேரள பொதுப்பணித்துறைச் செயலாளராகப் பணியாற்றியிருக்கிரார். அப்போது, கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் கீழ் எம்.சி. சாலையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த PATI-BEL நிறுவனத்தைச் சேர்ந்த மலேசிய நாட்டின் சிவில் பொறியாளர் “லீ சீ பீன்’ (Lee See Been) தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் எழுதி வைத்த தற்கொலைக் குறிப்பில், ஞானேஷ் குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வழக்கை தற்போது கேரள அரசு கையில் எடுத்திருக்கிறது. இது தொடர்பாக வெளியாகியிருக்கும் செய்தியில், ஞானேஷ் குமார் மீதான புகார்கள் குறித்தும், இதில் ஏற்பட்ட வெளி அழுத்தங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு உள்துறை அமைச்சர் அலுவலகம் நேரடியாக அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய ரமேஷ் சென்னிதலா, “காங்கிரஸ் நிர்வாகி வேணுகோபால் என்பவர், கேரள பொதுப்பணித்துறைச் செயலாளராக ஞானேஷ் குமார் இருந்தபோது நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து எனக்கு மனு ஒன்றை அளித்திருந்தார்.

























Honestly this hits the sweet spot between detail and brevity, no rambling and no shortcuts, and a quick visit to…