Time

Cinema

oi-V Vasanthi

<!–

–>

சென்னை: சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தினமும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த படம் வெளியீட்டு தாமதம், போட்டி படங்கள், எதிர்பார்ப்புகள் என பல சவால்களை சந்தித்தாலும், தற்போது அந்த எல்லாவற்றையும் தாண்டி வெற்றிப் பாதையில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக (Karuppu Day 4 Box Office ) நான்காவது நாள் வசூல் நிலவரம் படக்குழுவுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கருப்பு, மே 14ஆம் தேதி வெளியாக வேண்டிய படம். ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் படம் மே 15ஆம் தேதி தான் திரையரங்குகளில் வெளியானது. பொதுவாக இப்படியான வெளியீட்டு குழப்பங்கள் படத்தின் வசூலை பாதிக்கும். ஆனால் கருப்பு விஷயத்தில் அது முற்றிலும் மாறி, எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

Suriya Karuppu RJ Balaji Trisha Tamil Cinema Box Office

கருப்பு வசூல் நிலவரம்

முதல் நாளிலேயே கருப்பு ரூ.15.50 கோடி வசூல் செய்து நல்ல ஓப்பனிங்கை பெற்றது. அதன்பிறகு இரண்டாவது நாளில் படம் இன்னும் வேகமெடுத்து ரூ.24.15 கோடி வசூல் செய்தது. மூன்றாவது நாளில் அதைவிட அதிகமாக ரூ.28.35 கோடி வசூல் செய்து, படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றிருக்கிறது என்பதை நிரூபித்தது.

கருப்பு நான்காவது நாள் வசூல்

இந்த நிலையில் நான்காவது நாள் வசூல் நிலவரமும் வெளியாகியுள்ளது. ஆரம்ப கணக்குகளின்படி, நான்காவது நாளில் கருப்பு ரூ.14.30 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வேலைநாள் என்பதால் வார இறுதி வசூலை விட குறைந்திருந்தாலும், இது மிகவும் ஸ்ட்ராங்கான எண்ணிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

Suriya Karuppu RJ Balaji Trisha Tamil Cinema Box Office

கருப்பு பாக்ஸ் ஆபிஸ்

இதன் மூலம் இந்தியாவில் மட்டும் கருப்பு இதுவரை ரூ.82.30 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிராஸ் வசூல் ரூ.95.30 கோடியாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு மார்க்கெட்டிலும் படம் மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஓவர்சீஸில் மட்டும் ரூ.46 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் உலகளவில் கருப்பு மொத்த வசூல் ரூ.141.30 கோடியை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் ரூ.150 கோடி மைல்கல்லை படம் எளிதாக கடந்து விடும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணிக்கின்றன.

சூர்யாவுக்கு இது மிக முக்கியமான படம் என்று சொல்லலாம். கடந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய கமர்சியல் வெற்றியை பெறாத நிலையில், கருப்பு தற்போது அவருக்கு ஒரு சக்திவாய்ந்த கம்பேக் படமாக மாறியுள்ளது. ரசிகர்கள் இதை “விண்டேஜ் சூர்யா ரிட்டர்ன்ஸ்” என்று கொண்டாடி வருகின்றனர்.

கருப்பு படத்தின் கதை

படத்தின் கதையும் ரசிகர்களை கவர்ந்த முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நீதிக்காக போராடும் சாதாரண மனிதர்களின் வேதனை, அதனுடன் கருப்பசாமி நம்பிக்கையை இணைத்து மாஸ் கமர்ஷியல் வடிவில் ஆர்.ஜே. பாலாஜி சொல்லியிருப்பது ரசிகர்களை ஈர்த்துள்ளது. சூர்யாவின் ஸ்க்ரீன் பிளே, ஆக்‌ஷன் காட்சிகள், எமோஷனல் தருணங்கள், பின்னணி இசை என இவை அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியும் சமீபத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உணர்ச்சிபூர்வமான பதிவு வெளியிட்டிருந்தார். “இது வெறும் படம் இல்லை, மக்களின் உணர்வோடு இணைந்த அனுபவமாக மாறியுள்ளது” என்ற வகையில் அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

Suriya Karuppu RJ Balaji Trisha Tamil Cinema Box Office

கருப்பு பட ஓடிடி அப்டேட்

இதற்கிடையில் ஓடிடி ரிலீஸ் பற்றியும் பேச்சு தொடங்கிவிட்டது. கருப்பு திரைப்படம் தியேட்டர் ரன்னுக்கு பிறகு நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என தகவல்கள் வந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மொத்தத்தில், வெளியீட்டு குழப்பத்துடன் தொடங்கிய கருப்பு, தற்போது பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறது. நான்கே நாட்களில் ரூ.141 கோடி வசூல் என்பது சாதாரண விஷயம் இல்லை. இதே வேகம் தொடர்ந்தால் சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக கருப்பு மாறும் என்பது உறுதியாகத் தெரிகிறது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed