`ஸ்டாலின் சிறுகச் சிறுகச் சேர்த்த பெண்கள் ஆதரவை உதயநிதி அழித்துவிட்டார்..!' - மாணிக்கம் தாகூர்

தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மேடையில் தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா உரையாற்றும்போது அழுதார். அது குறித்து பேசிய தமீமுன் அன்சாரி, `தாராபுரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் அரசியல் அனுதாபம் பெறுவதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகம்’ என விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் விவாதமான நிலையில், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “அவர்கள் பிரசாரம் செய்தால் அது பிரசாரம், மற்றவர்கள் செய்தால் நாடகமா? மக்கள் ஏற்கனவே தெளிவாக முடிவெடுத்துவிட்டார்கள். போட்டி களத்திலேயே இல்லாதவர்கள் இது போன்று கதை சொல்வது இயல்பு. இப்போது மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்காகவே திமுக-வும் இடதுசாரி கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

முதல்வர் விஜய்

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடினமாக உழைத்து சிறுகச் சிறுகச் சேர்த்த பெண்களின் ஆதரவு முழுவதையும், உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியான ஆபாசப் பேச்சுக்கள் மூலம் அழித்துவிட்டார். பெண்களைக் கேவலப்படுத்துவது மற்றும் கூட்டணிக் கட்சிகளை அவமானப்படுத்துவது ஆகிய இரு காரணங்களால் திமுகவின் செல்வாக்கு முற்றிலுமாகச் சரிந்துள்ளது. இதனாலேயே வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பிரசாரங்களை மட்டுமே நம்பி இருக்கும் திமுகவை விட்டு மக்கள் வெகுதூரம் சென்றுவிட்டனர்.

பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தை மக்களை விட்டுத் தூரமாக்கும் வேலையை உதயநிதி ஸ்டாலின் செய்து முடிப்பார். எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை பணமில்லா அரசியலை முன்னெடுப்பதே முதன்மை இலக்கு. கும்மிடிப்பூண்டி தேர்தலுக்குப் பிறகு, 25 ஆண்டுகளுக்குப் பின் ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலில் போட்டியிடும் சூழலை உருவாக்கிய முதலமைச்சர் விஜய்யைப் பாராட்ட வேண்டும். திமுகவும் அதிமுகவும் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் பழைய சிலபஸைக் கொண்டுள்ள நிலையில், தவெகவின் புதிய நேர்மையான அரசியல் அணுகுமுறையை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். விஜய்யின் நேர்மையான நிர்வாகத்திற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு பெருகி வருகிறது. மக்கள் பண பலத்தைப் புறந்தள்ளி, நல்லது செய்வோருக்கே வாக்களிப்பார்கள்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link


Latest News

View All

  1. Разберитесь при рассмотрении вопроса о кракен ссылка и его роли в истории подпольных интернет-площадок. Подобные материалы рассматривают киберугрозы.

  2. Узнайте при рассмотрении вопроса о кракен даркнет с учетом вопросов безопасности и законодательства. Подобные материалы объясняют правовые аспекты использования подобных…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed