திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள மானூர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி காலாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட்ட நிலையில், பள்ளியில் உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியை பள்ளி ஆசிரியர்கள் ஆய்வு செய்ததில், அதில் மனித மலம் மிதப்பது தெரிய வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து குடிநீர் தொட்டியின் நீர் வெளியேற்றப்பட்டு, தொட்டியானது முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. ஆனால் இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் காவல் நிலையத்திலோ அல்லது பள்ளிக் கல்வி துறையிலோ புகார் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

திண்டுக்கல்

இந்த சூழலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருந்தது தெரியவந்து, கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டிக்குள் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகவும், இந்த நிகழ்வு இரு நாள்களாக மூடி மறைக்கப்பட்ட நிலையில் அதைக் கண்டித்து மாணவர்களின் பெற்றோர்களும், ஊர்மக்களுக்கும் போராட்டம் நடத்தியதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மனிதத்தன்மையற்ற இத்தகைய அருவருக்கத்தக்க செயல் கண்டிக்கத்தக்கது.

காலாண்டு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட போது, உணவு தயாரிப்பதற்கான ஏற்பாடுகளில் பள்ளி ஊழியர்கள் ஈடுபட்ட போது, இந்தக் கொடுமை தெரியவந்துள்ளது. உடனடியாக தண்ணீர் தொட்டியை பள்ளி நிர்வாகமே சுத்தம் செய்ததும், அந்தத் தொட்டியின் தண்ணீரில் சமைக்கப்பட்ட உணவை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுமோ? என்ற பெற்றோரின் அச்சத்தையும், கவலையையும் போக்கும் வகையில் மாணவர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் இன்று காலை உணவு அருந்தியதும் நம்பிக்கையளிக்கக் கூடியவை.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அதே நேரத்தில் இந்த நிகழ்வு வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டது ஏன்? இந்த நிகழ்வின் பின்னணியில் சதித் திட்டம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு காரணமானவர்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.

மானூர் தொடக்கப்பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்படாததும், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததாதும் தான் , இரவு நேரங்களில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து இத்தகைய செயல்களை செய்வதற்கு காரணம் ஆகும். இதைத் தடுக்கும் வகையில் மானூர் பள்ளி உள்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும். மானூர் அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டி மாற்றப்பட வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link


Latest News

View All

  1. Вывод из запоя в Реутове в наркологической клинике «Детокс» — это комплексное лечение алкогольной интоксикации, абстинентного синдрома и связанных с…

  2. Помощь оказывают врачи с практикой в наркологии, психиатрии и восстановительной терапии. Ознакомиться с деталями – [url=https://vyvvod-iz-zapoya-kemerovo18.ru/]вывод из запоя с выездом[/url]

  3. Наркологическая служба в Кемерово оказывает услуги круглосуточно. Можно вызвать специалиста к дому или пройти лечение в стационаре клиники. Врач оценивает…

  4. Вывод из запоя в Санкт-Петербурге — комплексная помощь при длительном приеме спиртного, выраженном похмельном синдроме и алкогольной интоксикации. Лечение можно…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed