இந்தியா – ஆப்கானிஸ்தான் டி 20:

தென்னாப்பிரிக்காவில் நீண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு முதல் முறையாக சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்திய அணி டி20 தொடருடன் சொந்த மண்ணில் புத்தாண்டை தொடங்கவுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று ஜனவரி 11 ம் தேதி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்த போட்டியில் ஆடும் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. அந்த வகையில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வாழங்கப்படவில்லை. மேலும் , விராட் கோலியும் முதல் போட்டியில் விளையாடவில்லை.

அதிரடி காட்டிய முகமது நபி:

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களமிறங்கினார்கள். அந்தவகையில் இருவரும் தங்களுடைய பேட்டிங்கை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். சரியான பார்ட்னர்ஷிப் அமைத்த குர்பாஸ் மற்றும் ஜத்ரான் ஜோடி 50 ரன்களை குவித்தது. முதல் விக்கெட்டை எடுக்க முடியாமல் 7 ஓவர் வரை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.

அப்போது அக்ஸர் படேல் வீசிய பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் விக்கெட்டை பறிகொடுத்தார். 28 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 28 ரன்களை குவித்தார். பின்னர், இந்திய அணி சார்பில் 8 வது ஓவரை ஷிவம் துபே வீசினார். ஷிவம் துபே வீசிய இரண்டாவது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்படி, 22 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என மொத்த, 25 ரன்களை விளாசினார்.

இதையடுத்து, அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் ரஹ்மத் ஷா இருவரும் களம் இறங்கினார்கள். இதில், உமர் சாய் அதிரடியாக விளையாடினார். அப்போது ரஹ்மத் ஷா அக்‌ஷர் படேல் வீசிய பந்தில் 3 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த முகமது நபி அதிரடி காட்ட ஆரம்பித்தார். அந்த வகையில், 27 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை பறக்க விட்டு 42 ரன்களை குவித்தார். அப்போது முகேஷ் குமார் வீசிய பந்தில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. 159 என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட உள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Специалисты регулярно помогают при интоксикации, запоях, абстиненции и сложных состояниях зависимости. Дополнительная информация – [url=https://vivod-iiz-zapoya-v-sankt-peterburge16.ru/]анонимный вывод из запоя в Санкт-Петербурге[/url]
Honest take is that this was better than I expected when I clicked through, and a look at pebblepineoutpost reinforced…
Когда нарколог приезжает на адрес, проводится полноценный медицинский осмотр. Врач оценивает сознание, пульс, давление, дыхание, признаки обезвоживания и выраженность абстинентного…
Вывод из запоя в Санкт-Петербурге — комплексная помощь при длительном приеме спиртного, выраженном похмельном синдроме и алкогольной интоксикации. Лечение можно…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

வான்ஸின் ‘ஒப்பந்த வேலையாட்கள்’ கருத்து ஆழ்ந்த புண்படுத்தும்: அரசாங்கம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

வேதியியலாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை விளம்பரப்படுத்த அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படலாம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

’10 வருட தங்க விசாவுடன் துபாயில் வாழ்வேன்’: இடைத்தேர்தலில் மகன் தோல்வியடைந்த ஹுமாயுன் கபீர் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜே&கே: சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் ரியாசியில் துப்பாக்கிச் சூட்டு காயத்தால் மரணம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com
You May Have Missed
You May Have Missed

13 வயதில், தி லயன் கிங்கில் இளம் சிம்பாவாகப் பாட ஜேசன் வீவருக்கு 2 மில்லியன் டாலர்கள் டிஸ்னியால் வழங்கப்பட்டது; அவரது தாயார் அதற்குப் பதிலாக $100,000 மற்றும் ராயல்டிகளைத் தேர்ந்தெடுத்தார், மேலும் 32 ஆண்டுகளுக்குப் பிறகும் காசோலைகள் வரவுள்ளதாக அவர் கூறுகிறார் | ஆங்கில திரைப்பட செய்திகள் | ACTPnews.com

Медицинские услуги на дому выбирают при стабильном самочувствии, когда нет признаков тяжелого острого состояния и врач допускает лечение вне клиники.…