ஈழத்தமிழர் பிரச்னை சர்வதேச பிரச்னை. திமுக, அதிமுக, காங்கிரஸால் அதில் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறி சமூக நீதிக்காக திமுக கூட்டணியிலேயே தொடர்ந்தேன். அதனால் ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை இழந்தேன். 2016 இல் நாங்கள் 180-200 இடங்களில் தனியாக நிற்கப் போகிறோம், நீங்கள் வேறு பாதையில் செல்லலாம் என மு.க.ஸ்டாலின் கூறிய போதுதான் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினேன்.
அப்போதே ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு எனப் பேசினேன். மீண்டும் திமுகவோடு கூட்டணிக்குப் போனோம். தொடர் வெற்றிகள் கிடைத்தன. 2026 இல் திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. மக்கள் இட்ட கட்டளை வேறாக இருந்தது. யாருமே எதிர்பார்க்காத முடிவை விஜய் எடுத்தார். பாஜகவின் வெறுப்பரசியலுக்கு எதிராக ‘ஜோசப் விஜய்’ என அறிவித்துக் கொண்டு விஜய் இறங்கினார்.
பாஜகவோடு கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் ஆதரவை நாடாமல் காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். அதுவே அவரின் மதச்சார்பற்றத் தன்மையை நிரூபித்தது.
முன்பு நடந்தவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன். ஆதவ் அர்ஜுனா பாஜக அல்லாத மாற்று அணிக்காக என்னிடம் எவ்வளவோ பேசினார். ஆனால், பதவிக்காக ஒரு கூட்டணியை உடைக்கமாட்டேன் எனக் கூறினேன். எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகத்தை முதலில் அப்போதைய முதல்வர் ஸ்டாலினும் பின்னர் ராகுல் காந்தியும் வெளியிட்டு நான் பெறுவதாக இருந்தது.
பின்னர் அது நடக்காமல் போனது. அதன்பின் விஜய் வெளியிட்டு நான் புத்தகத்தைப் பெறும் ஏற்பாடோடு ஆதவ்வும் ஜான் ஆரோக்கியசாமியும் என்னை வந்து சந்தித்தார்கள். அப்போதும் அந்த மேடையில் நான் இருந்தால் எங்களின் அணிச்சேர்க்கை பாதிக்கப்படுமென மறுத்தேன்.

























hracie automaty deluxe nike hracie automaty sk online casino Free spiny fortuna dnes 10 euro deposit bonus vianocny bonus casino