மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, “கடந்த 5 வருடங்களில் ஸ்டாலினும், உதயநிதியும் ஒரு நாளாவது பாஜகவையோ இல்லை மோடியை எதிர்த்தோ பேசியிருக்கிறார்களா? அவர்கள் எப்போது பார்த்தாலும் ஆளுநரை எதிர்த்துதான் பேசியுள்ளனர். ஆனால், நாங்கள் எங்களுடைய முதல் மாநாட்டிலேயே பாஜகவை எங்கள் கொள்கை எதிரி என்று அறிவித்தோம்.
இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்? இப்படி அறிவித்த எங்கள் தலைவரைப் பார்த்து பேசுவதற்கு இவர்களுக்கு அருகதை கிடையாது.
எஸ்.ஐ.ஆரை எதிர்த்து குரல் கொடுத்து போராட்டம் செய்தது தமிழக வெற்றிக் கழகம். போராட்டத்திற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. அனுமதிக்கப்படாத இடத்தில் யார் போராட்டம் செய்தாலும், காவல்துறை தடுக்கத்தான் செய்வார்கள். தவெக நிகழ்ச்சி நடத்தினாலும் அதைத்தான் செய்வார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டம் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதிக்கப்படும் இடங்கள் உள்ளன. அனுமதிக்கப்படாத இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தினர் அரசும் உறுதுணையாக இருக்கும்.

டெல்லி போராட்டம் தனி இயக்கம் நடத்தும் போராட்டம். அதற்கு ஆதரவு கொடுக்க தேவையில்லை. அவர்களுக்குப் பின்னால் இருந்து யார் இயக்குகிறார்கள் என்று தெரியாது. எஸ்.ஐ.ஆர் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் 170 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கும்.
இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளும் அதிமுக கோட்டையாக இருந்தது. எடப்பாடி எந்த நிலைக்குக் கொண்டு போய் சென்று விட்டார் என்பதை பார்க்க முடிகிறது. அதிமுகவின் ஒட்டுமொத்த வாக்குகளும் விஜய்யை நோக்கி வந்துள்ளது. மூன்றாவது இடத்திற்குப் போய் இருக்கிறது அதிமுக” என்றார்

























Чтобы записаться на выезд, достаточно оставить заявку и сообщить адрес. Консультант задает несколько стандартных вопросов: сколько длится запой, сколько лет…