சமீபத்தில், தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், சாத்தான்குளத்தில் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழி இடம்பெற்றிருந்தது. அது தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டதாகும்.
தமிழ்நாட்டின் அடிப்படைக் கொள்கையே இருமொழிதான். ஆனால், தமிழ்நாடு அரசு சார்பாக வைக்கப்பட்டுள்ள பலகையில் இந்தி இடம்பெற்றிருக்கிறது என்று எதிர்ப்புகள் எழுந்தன.
இதையடுத்து அந்த வழிகாட்டிப் பலகையில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


















![சிக்மா முழு திரைப்படத் தொகுப்பு: ‘சிக்மா’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 1 [LIVE]: விஜய்யின் ஜேசன் சஜய்யின் இயக்குனராக சந்தீப் கிஷனுடன் அறிமுகமான படம் நல்ல திரையரங்குகளில் ஓடுகிறது | தமிழ் திரைப்பட செய்திகள்
| ACTPnews.com](https://actpnews.com/wp-content/uploads/2026/10/1790934973-300x169.avif)






Thanks for keeping the writing direct without losing the warmth that makes content feel human, and a stop at norzavo…