இதையடுத்து FQL நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மனுக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர்.
இது குறித்து பேசிய பெண்கள் மற்றும் இளைஞர்கள், “கோவிலுக்கு கட்ட வைத்திருந்த பணத்தை இழந்துட்டோம், தாலி செயின் , நகைகளை அடகுவைத்து காசு கட்டுனோம். லட்சக்கணக்குல இழந்து தவிக்கிறோம், போலீஸுக்கு இது தெரியும். முன்னவே நடவடிக்கை எடுத்திருந்தால் ஏமாந்திருக்கமாட்டோம்., உறவினர்கள் சொல்லியதை கேட்டு நம்பி பணம் செலுத்தினோம், ரிச்சர்ட் என்பவர் அடிக்கடி வீடியோகாலில் பேசினார் அது உண்மையாவே வெளிநாட்டுகாரரா? AI வீடியோவாக என தெரியவில்லை நம்பி ஏமாற்றமடைந்து நிற்கிறோம்” என்றனர்.
























