உதய் கார்த்திக் நடிப்பில், இயக்குநர் செல்வா இயக்கத்தில் ‘ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியது.

யுகே க்ரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும் ஃபீல் குட் எண்டர்டெயினர் திரைப்படம் ‘ஃபேமிலி’. இப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது.

ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்கப் போராடுகிறார்கள். அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படமாக உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன். இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் ஜனரஞ்சக திரைப்படமாக உருவாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் நாயகனாக டைனோசர்ஸ் படத்தில் நடித்த நாயகன் உதய் கார்த்திக் நடிக்கிறார். நாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், ஆர்.ஜே. பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனிவீ இசையமைக்கிறார். கே.பி. நந்து கலை இயக்கம் செய்கிறார். ஆர். சுதர்ஷன் எடிட்டிங் செய்கிறார். பெரும் பொருட்செலவில் UK Creations சார்பில் K பாலாஜி தயாரிக்க, R சின்னப்பன், நதீஷ் A ஆகியோர் இணை தயாரிப்பு செய்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Family Movie: டைனோசர்ஸ் பட ஹீரோ உதய் கார்த்திக்கின் அடுத்த படம்: ஃபேமிலி படத்தின் ஷூட்டிங் தொடக்கம்!

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Изучить вопрос подробнее – [url=https://1kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-alkogolya-posle-zapoya[/url]
A piece that brought a sense of order to a topic I had been finding chaotic, and a look at…
Honest assessment after reading this twice is that it holds up under careful attention, and a look at berrycovevendoratelier extended…
Strong recommendation from me, anyone curious about the topic should make time for this, and a look at chestnutharborcollective only…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

டெல்லியின் புதிய போராட்ட இடமான ராம்லீலா மைதானத்தில் இந்த ஆண்டு வெறும் 3 தேதிகள் மட்டுமே உள்ளன – விவரங்களை சரிபார்க்கவும் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

1.8 கோடி மதிப்பிலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை’: தலைமை நீதிபதி சூர்ய காந்த் மீதான கேரள கட்சியின் பதிவை காங்கிரஸ் நிராகரித்தது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘அன்புள்ள சூர்யா காந்த்…’: தலைமை நீதிபதியை ‘ராஜினாமா செய்ய வேண்டும்’ என காங்கிரஸ் கேரள பிரிவினரின் பதிவு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்திகள் | ACTPnews.com

மாலை செய்தி மடக்கு: ராகுல், பிரியங்கா தலைமையில் எஸ்சி பெரிய அணிவகுப்பு; தேர்தல் ஆணையம் மற்றும் பலவற்றிற்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படும் மனு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Reading this site over the past week has changed how I evaluate content in this space, and a look at…