தேர்தல் ஆணைய குளறுபடி: ``ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும்" - ஸ்டாலின் | Election Commission blunder: "Gyanesh Kumar must resign immediately" – Stalin


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 1.3 கோடி பெயர்கள் நீக்கப்பட்டது, “படிவம் 6′-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ஆணையர்களின் அனுமதியின்றி பல உத்தரவுகள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் முன்வைத்திருக்கின்றனர்.

மேலும், முக்கிய முடிவுகள் தங்கள் கவனத்திற்கு வராமலேயே எடுக்கப்படுவதாக இரு ஆணையர்களும் 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதனால், தேர்தல் ஆணையத்திற்குள் அதிகாரிகளிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து பரவலாக பொதுவெளிகளில் விவாதங்களும் தொடங்கியிருக்கின்றன.

Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர்

Gyanesh Kumar – தலைமை தேர்தல் ஆணையர்

அதே நேரம் இந்தக் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக பதிலளித்தது. அதில், “கடந்த 10 மாதங்களில் நடந்த சில குறிப்பிட்ட உட்புற விவாதங்களை மட்டும் முன்னிலைப்படுத்துவது முழுமையான உண்மையைக் காட்டாது. கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சீர்திருத்தங்கள் (SIR உட்பட) மற்றும் 40-க்கும் மேற்பட்ட புதிய முயற்சிகள் அனைத்தும், முழு ஆணையத்தின் ஏகமனதான ஒப்புதலுடனே எடுக்கப்பட்ட முடிவுகளாகும். மேலும், பல்வேறு மாநிலத் தேர்தல்களும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.” எனக் குறிப்பிட்டிருந்தது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed