கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியான தவெக-வில் இணைந்தனர்.
இதனால் இரு தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6) நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
அதேபோல், தாராபுரம் தொகுதியில் தவெகவின் சத்யபாமா, திமுகவின் சுகன்யா, அதிமுகவின் பானுமதி, நாதகவின் கார்த்திகா மற்றும் சிபிஐ-யின் லட்சுமணன் உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
இந்த இரண்டு மையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு, துப்பாக்கி ஏந்திய போலீசார், சிசிடிவி கேமரா கண்காணிப்பு மற்றும் கூடுதல் தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமனம் போன்ற கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்திருக்கிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்திருக்கின்றனர்.

6 மணி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 85.88 சதவிகித வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் மொத்தம் 80.31 சதவிகித வாக்குகளும், பதிவாகி இருக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 93.22 சதவிகித வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் மொத்தம் 89.89 வாக்குகளும் பதிவாகி இருந்தன. நடந்து முடிந்த தேர்தலை விட வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது.
இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

























Came across this through a roundabout path and now it is on my regular rotation, and a stop at garnetharborretailguild…