Shruti Hassan: தெலுங்கு சினிமாவுக்கு வாழ்க்கை முழுதும் நன்றியுடன் இருப்பேன்.. ஷ்ருதி ஹாசன் உருக்கம்!
இந்த ஒரு காரணத்திற்காக தெலுங்கு சினிமா துறைக்கு தான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்று நடிகை ஷ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகை ஷ்ருதி ஹாசன் இயக்கத்தில் உருவான ’இனிமேல்’ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவருடன் நடித்திருந்தார். கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுத, இந்தப் பாடலை தயாரித்தும் இருந்தார். மேலும் படிக்க
Manikandan: ஹாட்ரிக் வெற்றிக்குத் தயாராகும் நடிகர் மணிகண்டன்… நக்கலைட்ஸ் குழுவுடன் ஷூட்டிங் நிறைவு
ஜெய் பீம் படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் நடிகர் மணிகண்டன். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘குட் நைட்’ படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணியில் இந்த ஆண்டு லவ்வர் படத்தில் நடித்தார். 2024ஆம் ஆண்டு இதுவரை வெளியான படங்களில் ரசிகர்களை லவ்வர் படம் அதிக ரசிகர்களைக் கவர்ந்து விவாதப் பொருளாகவும் மாறியது. மேலும் படிக்க
Nani 33: அடுத்த படத்துக்கு புது மாஸ் கெட்- அப்.. வெற்றி இயக்குநருடன் மறுபடி கூட்டணி: நடிகர் நானி தந்த அப்டேட்!
தசரா வரிசையில் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இருவரும் புதிய படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ‘நானி 33’ என அறிவிக்கப்பட்டுள்ள படத்தை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார். இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரசிகர்களுக்கு முதற்கட்டமாக போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்து படக்குழு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் படிக்க
TVK Vijay: ஈஸ்டர் தினத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம் தழைக்கட்டும் – தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் ஈஸ்டர் மக்களுக்கு திருநாள் வாழ்த்து பகிர்ந்துள்ளார். ”உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்.” என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
The Goat Life Boxoffice: மூன்றே நாட்களில் வசூல் சாதனை… ரூ.50 கோடிகளைக் கடந்த பிருத்விராஜின் ஆடு ஜீவிதம்!
ஆடு ஜீவிதம் படம் எதிர்பார்த்தபடி உலகளவில் முதல் நாளில் மட்டும் ரூ.16.7 கோடிகளை வசூலித்ததாக படக்குழு தகவல் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் முதல் மூன்று நாட்களின் வசூல் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ,50 கோடிகளை ஆடு ஜீவிதம் வசூலித்துள்ளது. மேலும் படிக்க
மேலும் காண