Bigg Boss: இந்த வருஷம் இதெல்லாம் புதுசு! - `காமன்மேன்' பிக் பாஸ் ஷோவுக்கு யார் பாஸ்? | latest updates regarding upcoming biggboss tamil season 10


விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்க இருக்கிறது. விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்கவிருக்கிறார்.

வழக்கமான பிக்பாஸ் போல இல்லாமல் இந்த வருடம் நிகழ்ச்சியில் 0சில மாற்றங்களைப் புகுத்தவிருக்கிறார்களாம்.

முந்தைய சீசன்களில் சினிமா, டிவி நட்சத்திரங்கள், மாடலிங் ஆட்களுடன் பிரபலமல்லாத சாதாரண நபர்களூம் போட்டியாளர்களாக பங்கேற்று வந்தனர். இவர்கள் பெரும்பாலும் விஜய் டிவியில் பணிபுரியும் ஊழியர்களின் நட்பு வட்டத்திலிருந்தோ அல்லது முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்குத் தெரிந்தவர்களாகவோ இருப்பார்கள்.

இந்த நிலையில் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே “பிக்பாஸ் காமன் மேன்’ என்ற ஒரு ஷோவை நடத்தவிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து பதிவு செய்தவர்களில் இருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘பிக் பாஸ் காமன் மேன்’ ஷோவில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் முடிவில் பெர்ஃபார்மன்ஸை வைத்து சிறந்த சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் தொடர்பான கூடுதலான ஒரு அப்டேட் என்னவெனில், இதற்கு முன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நேரத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது நிகழ்ச்சி. இந்த வருடம் எல்லா மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஒளிபரப்புவது குறித்து யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா என்றால் வாய்ப்பில்லை என்கிறார்கள். எனவே விஜய் சேதுபதிக்குப் பதில் அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக யார் வரப்போகிறார்கள் என்பதும் ஒருவித எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

பிக்பாஸ் காமன் மேனை தொகுத்து வழங்கச் சரியான ஆள் யார் என்பதை நீங்களும் கமென்ட் பண்ணுங்க பிக் பாஸ் ஃபேன்ஸ்..!



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed