அருண் ஐ.பி.எஸ்


சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் அமல்ராஜை நியமனம் செய்து உத்தரவிட்டிருந்தது. சட்டமன்றத் தேர்தல் முடிந்து, தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அப்போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிகாரிகளுக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. அதில் அருண் ஐபிஎஸ்., தமிழ்நாடு ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அருண் ஐ.பி.எஸ்
அருண் ஐ.பி.எஸ்

அந்தப் பொறுப்பை ஏற்று 45 நாள்களே ஆன நிலையில், அருண் அப்பதவியிலிருந்து திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, வண்டலூர் தமிழ்நாடு காவல்துறை அகாடமி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அருண், ஐ.பி.எஸ் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும், சென்னை பயிற்சிப் பிரிவு காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) ராஜீவ் குமார், ஐ.பி.எஸ், வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் அகாடமியின் இயக்குநர் பொறுப்பைக் கூடுதல் பொறுப்பாகக் கவனித்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Изучаете загородное жилье https://zhksalehouse.ru за городом. Во время выбора дома рекомендуется сравнить расположение. В публикациях освещаются варианты планировок. Покупателям загородного…

  2. Современная разработка сайтов https://volt-site.ru на Next.js и внедрение AI-агентов позволяет создавать быстрые веб-приложения, интегрировать умных чат-ботов и автоматизировать бизнес-процессы с…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed