வெளியேறிய நாடுகள்

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதில் பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதிநிதிகள் பேசி வருகிறார்கள்.

நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஐ.நா பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

இவர் உரையாற்றத் தொடங்கியதும் சவூதி அரேபியா, சூடான், துனிசியா, உஸ்பெகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், அல்ஜீரியா, ஈரான், மலேசியா, மாண்டினீக்ரோ,

வெளியேறிய நாடுகள்

கிர்கிஸ்தான், ஜோர்டான், லிபியா, மார்ஷல் தீவுகள், மொரிஷியஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் அரங்கிலிருந்து வெளியேறிவிட்டனர்.

இந்த வெளியேற்றம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடந்தது.

பல நாடுகள் வெளியேறியது குறித்து நெதன்யாகு, “நான் தொடங்குவதற்கு முன், ஒரு சிறிய அறிவிப்பு.

இந்த அரங்கத்தை விட்டு இன்னும் வெளியேறாத மனசாட்சியற்றக் கோழைகள் யாரேனும் இருந்தால், தயவுசெய்து இப்பொழுதே வெளியேறி விடுங்கள்” என்று கூறித் தனது உரையைத் தொடங்கினார் நெதன்யாகு.

ஹமாஸ் குறித்து…

பிறகு பேசத் தொடர்ந்தவர், “2023-ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் தீவிரவாதிகள் தங்களுக்கு வேலை வாய்ப்பளித்த பக்கத்து நாடான இஸ்ரேலியர்களைக் கொன்றுகுவித்தார்கள்.

இஸ்ரேல் மீது இனப்படுகொலை குற்றம் சுமத்துவது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்.

இஸ்ரேல் இனப்படுகொலை செய்யவில்லை… ஒரு இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

ஈரான் பற்றி…

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இதே மேடையில் நான் ஒன்றைக் கூறினேன்.

இஸ்ரேலை அழிக்கும் நோக்கத்துடனும், ஒட்டுமொத்த உலகிற்கே அச்சுறுத்தலாகவும் அமையக்கூடிய அணு ஆயுதங்களை ஈரான் சர்வாதிகார ஆட்சி உருவாக்குவதைத் தடுப்பேன் என்று சபதம் எடுத்தேன்.

அதைத்தான் நாங்கள் துல்லியமாகச் செய்தோம். அது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.

நீங்கள் இங்கே ஐ.நா பொதுச்சபை அரங்கில் அமர்ந்திருக்கிறீர்கள்.

ஈரான்
ஈரான்

ஒரு டன் எடையுள்ள பாலிஸ்டிக் ஏவுகணை இந்த இடத்தைத் தாக்கினால் என்னவாகும் என்று உங்களுக்குத் தெரியுமா?

அது இந்த முழு வளாகத்தையும் தரைமட்டமாக்கிவிடும். உண்மையில், அப்படிப்பட்ட இரண்டு ஏவுகணைகள் முழு ஐ.நா-வையே அழித்துவிடும்.

அதிகாரத்தில் இருப்பவர்களை விட மக்களின் சக்தியே வெல்லும்.

ஒரு நாள் ஈரானிய மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள். அது வெகு தொலைவில் இல்லை.

அந்தக் கொடூரமான ஆட்சி அதன் பொய்களாலும், ஊழலாலும், கொடூரத்தாலும் வீழ்த்தப்படும்.

இந்தத் தீய ஆட்சி கவிழும். நாம் அனைவரும் அந்த நாளைக் கொண்டாடுவோம்.

இஸ்ரேல் காலனித்துவமா?

சிறிய நாடான இஸ்ரேல் மீது அவர்கள் காலனித்துவ குற்றம் சுமத்துகிறார்கள். யார் எங்கள் மீது குற்றம் சுமத்துவது? குற்றம் சுமத்துவதில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸும் உண்டு.

அவர்கள்தான் காலனித்துவம் என்ற சொல்லையே உருவாக்கினார்கள். அவர்களின் காலனிகள் உலகத்தையே சூழ்ந்திருந்தன.

எங்களைப் பார்த்து காலனித்துவவாதிகளா?” என்று உரையாற்றினார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Если вы хотите быстро и качественно оформить [url=https://karkasnye-doma-spb12.ru]каркасный дом под ключ в спб[/url], обращайтесь к проверенным специалистам. Каркас создается из…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed