தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா (Anna Serial). இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் தூக்கத்தில் இருந்து எழுந்து “பாண்டியம்மா வந்த பிறகு தான் இவ்வளவு பிரச்சனை, முதலில் அவளை அந்த வீட்டில் இருந்து துரத்தணும்” என்று சொல்லிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, சௌந்தரபாண்டி “சும்மாவே உன் பொண்டாட்டி உன்னை மதிக்க மாட்டா, இப்போ அவ அண்ணன் கூட வேற சேர்ந்துட்டா, அவ கிட்ட கொஞ்சம் உஷாரா இரு, அவளை உன் கைக்குள்ள வச்சிக்க பாரு” என்று சொல்கிறார்.
அடுத்ததாக ஸ்டேஷனலில் யாரோ ஒருவர் ப்ரீயாக புடவைகளை எடுத்து வந்து கொடுக்க, அதில் ஒரு புடவையுடன் வீட்டிற்கு வரும் முத்துப்பாண்டி, இசக்கியிடம் கொடுத்து அவள் மீது அன்பாக இருப்பது போல் டிராமா போட, அவள் அது ப்ரீயா வந்த புடவை என்பதை கண்டுபிடித்து பதிலடி கொடுக்கிறாள்.
பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாண்டியம்மா சாப்பிட எதுவும் இல்லாமல் பசியில் தவிக்க, பாக்கியமும் இசக்கியும் அவளது கைகளைப் பிடித்து சொல்ல, பரணி ஒரு ஊசியை போட்டு “உனக்கு போட்டது விஷ ஊசி. இன்னும் ஒரு மணி நேரத்தில் மாத்து ஊசி போடணும். இல்லனா உன் கை கால் எல்லாம் இழுத்து ரத்தம் சுண்டி செத்து போய்டுவ” என்று சொல்ல பாண்டியம்மா பதறுகிறாள்.
“ஏண்டி எனக்கு இந்த ஊசியை போட்ட, மாத்து ஊசியை போடு” என்று கெஞ்ச, “உனக்கு 10 நிமிஷம் டைம் தர “அதுக்குள்ள உன் துணி மணி எல்லாத்தையும் மூட்டையை கட்டிக்கிட்டு இந்த வீட்டை விட்டு ஓடி போய்டு, உனக்கு மாத்து ஊசி போடுறேன்” என்று சொல்கிறாள் பரணி. பாண்டியம்மா முடியாது என்று சொல்லி சௌந்தரபாண்டியை கூப்பிட, பரணி இன்னும் பயம் காட்ட, பாண்டியம்மா மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு ஊருக்கு கிளம்பி வெளியே வர ஆடியோ ரெடியாக இருக்கிறது.
இப்பயாவது “ஊசியை போடு டி” என்று கேட்க, பரணி “நீ ஊருக்கு போற வரைக்கும் போட முடியாது” என்று சொல்கிறாள். பஸ்ஸில் வைத்து “எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு, அதை நான் பார்க்கணும். அதனால் நான் ஊருக்குள் கிளம்பிட்டேன். இனிமே எனக்கு போன் பண்ணாத” என்று சொல்ல வைத்து வீடியோ எடுத்து கொள்கின்றனர்.
பாண்டியம்மாவை ஊருக்கு அனுப்பி வைத்த பிறகு வீட்டிற்கு வந்து இவர்கள் எல்லாரும் சந்தோசமாக இருக்கின்றனர். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் காண