AIADMK begs for Anbumani’s position as Member of Parliament – Edappadi Palanichami Review Lok sabha election 2024 | Lok Sabha Elections 2024 : அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அதிமுக போட்ட பிச்சை


விழுப்புரம் : அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அதிமுக போட்ட பிச்சை: எங்களுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று எங்களை விமர்சனம் செய்து வருகிறார்கள் என, விழுப்புரத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி பாமகவை கடுமையாக விமர்சனம் செய்தார்
அதிமுக தேர்தல் பிரச்சாரம் 
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி மைதானத்தில் விழுப்புரம் தொகுதி அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் பாக்கியராஜ்யை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி….
திமுக கட்சியே அல்ல கார்பரேட் கம்பெனி
”ஸ்டாலின் மாநிலத்திலும், மத்தியில் பாஜக மோடியும், ஆட்சி செய்கிறார்கள் இரண்டு கட்சிகளும் ஒன்றும் செய்யவில்லை என்றும் தமிழகத்தை மாற்றான் தாய்பிள்ளைபோல் பார்க்கிறார்கள். எதிர்கட்சிகள் ஆட்சி செய்தால் மத்திய அரசு நிதி அளிப்பதில்லை. அது பாஜக அரசாகவும் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் இரண்டு பேர்களே இதை தான் செய்கிறார்கள்.
ஜி எஸ் டி வருவாய் அதிகம் செலுத்தினாலும் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாகவும் கலெக்‌ஷன் கரப்பஷன், கமிஷன் திமுக ஆட்சியில் சரியாக நடந்து கொண்டு இருப்பதாகவும், திமுக கட்சியே அல்ல கார்பரேட் கம்பெனியாக செயல்படுவதால் மக்களை பற்றி கவலைப்படாமல் செயல்படுகிறார்கள்” குற்றஞ்சாட்டினார்.
துரோகம் செய்தவர்கள் வீதிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்
திமுக அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் நீதிமன்றங்களில் ஏறி இறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் முன்னாள்  அமைச்சர்கள் மீது பொய் வழக்கினை திமுக அரசு போடுவதாக குற்றஞ்சாட்டினார்.
திமுக கட்சி என்பது குடும்ப கட்சியாக உள்ளது அதில் நான்கு முதல்வர்கள் உள்ளார்கள் உதயநிதி ஸ்டாலின், சபரீசன், துர்கா ஸ்டாலின்தான் முதல்வராக உள்ளதாகவும் திமுகவில் அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள்தான் முதல்வராக வர முடியும் என கூறினார்.
அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் வீதிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள், அதிமுக என்பது இரும்பு எக்கு கோட்டை அதனை எவராலும் அசைக்க முடியாது உழைப்பாளி மிகுந்த கட்சியாக அதிமுக உள்ளதாகவும், அதிமுகவை மிரட்டி பார்த்து பணிய வைக்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம் விலைவாசி உயர்ந்துள்ளதற்கு மத்திய அரசும் மாநில அரசும் தான் காரணம் என தெரிவித்தார்.
அதிமுகவில் செந்தில்பாலாஜி இருந்தால் ஊழல்வாதி… திமுகவிற்கு சென்றால் உத்தமர்
பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மக்களை வஞ்சிக்கும் அரசாக மத்திய மாநில அரசுகள் செயல்படுவதாகவும், வேண்டுமென்றே மக்களை ஏமாற்றி ஸ்டாலின் செயல்படுவதாகவும், இளைஞர்களுக்கு கல்வி கடன் ரத்து செய்யப்படவில்லை என்றும் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு செயல்படுவதாக வீடு கட்டுவதற்கு கட்டுமான பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், வீடு கட்டுவது திமுக ஆட்சியில் கனவில் தான் நடைபெறும் என கூறினார்.
தமிழகம் முழுவதும் ஆறாயிரம் கோடி மதுபான கடைகள் உள்ளன இதில் 3 ஆயிரம் கோடி ஊழல் செய்த அரசாக திமுக உள்ளதாகவும், அதிமுகவில் செந்தில்பாலாஜி இருந்தால் ஊழல் வாதி திமுகவிற்கு சென்றால் அவர் உத்தமராகிவிடுவார் என்றும் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டுமென ஸ்டாலின் துடிக்கிறார் எதற்கு என்றால் மத்தியிலும் ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிக்கனும் என்பதற்காகவும் ஸ்டாலின் அரசு விளம்பரத்திற்காக செயல்படுவதாக தெரிவித்தார்.
போதை பொருள் நிறைந்த மாநிலம் 
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்வதாகவும், அராஜகம் பிடித்த கட்சியாக திமுக உள்ளதாகவும் மதத்தின் அடிப்படையில் அதிமுக ஒருபோதும் பிரித்து பார்க்காது என்றும் இந்தியாவிலையே முதல் மாநிலமாக கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்றும் மின் கட்டணம் 52 சதவிகிதம் உயர்த்தபட்டுள்ளதாகவும், மக்களை வாட்டி வதைக்கும் அரசாக திமுக உள்ளதாக கூறினார்.
காவலர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல்
புகார் பெட்டி மூலம் மனுக்களை பெற்று மக்களை ஏமாற்றியவர்தான் ஸ்டாலின் என்றும் இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைப்பதாக கூறுகிறார் மாநிலத்திலையே ஒன்னும் செய்ய முடியாத அவர் இந்தியாவை காக்க போகிறாராம் என விமர்சித்தார்.
கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைக்குண்டம் போனான் என்பது ஸ்டாலினுக்கு பொருந்தும் என்றும் கள்ளச்சாரம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதாகவும், காவலர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலை தான் உள்ளதாகவும் பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது என்றார்
அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அதிமுக போட்ட பிச்சை
அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அதிமுக போட்ட பிச்சை. கடந்த அதிமுக ஆட்சியில் 2020 டிசம்பரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டது. அதன் பிறகு வந்து ஸ்டாலின் அரசு இதனை செயல்படுத்தவில்லை. பாமக, பாஜக கூட்டணி வைத்துள்ளது. பாஜக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தமாட்டோம் என கூறிவிட்டது இப்போது பாமக கொள்கை என்னாவாயிற்று என கேள்வி எழுப்பினார்.
ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் மாற்றி மாற்றி கூட்டணி வைத்து வெற்றி பெறுவார்கள். அதிமுக கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றுவதும். கூட்டணி தர்மம் காப்பதும் என்றால் அதிமுகவுக்குதான் பொருந்தும் வேறு யாருக்கும் பொருந்தாது என்றார்
மோடி வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என கூறுகிறார். ஆனால் வாரிசு அரசியலுடைய பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளது. சந்தர்ப்பத்துக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்கள். அதிமுக எப்போதும் ஒரே நிலைப்பாடுதான். அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளோடு கூட்டணி தர்மத்தோடு நடந்துகொள்வோம். சிலர் சந்தர்ப்பம் கிடைக்கும்போது எங்களுடன் கூட்டணி அமைத்து அதனை அவர்களுக்கு சாதகமாக்கி எங்களை விமர்சனம் செய்து வருகிறார்கள். இதற்கெல்லாம் இந்த தேர்தலில் முடிவு தெரிந்துவிடும் என்று விமர்சனம் செய்தார்

மேலும் காண

Source link