4 people died and 9 people were admitted to hospital with serious injuries in a fire in a Delhi apartment.


தலைநகர் டெல்லியில் ஷஹ்தராவில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய 4 மாடி கொண்டது இந்த குடியிருப்பு. இதில் பலரும் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கார் பார்க்கிங் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

#WATCH | Delhi: A massive fire broke out in a house in the Shahdara area. Fire brigade and police are present at the spot. Efforts to douse the fire are underway. Further details awaited: Delhi Police pic.twitter.com/Q6RtAV94lW
— ANI (@ANI) March 14, 2024

கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது. இதனால் குடியிருப்பில் இருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்தில் துரதிஷ்டவசமாக 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனோஜ் (வயது 30), சுமன் (வயது 28), 5 வயது மற்றும் 3 வயது குழந்தை என 4 பேர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு குறுகிய தெருவில் அமைந்துள்ளதாள் தீயணைப்பு வாகனம் கொண்டு செல்ல கடும் சவாலாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#WATCH | Delhi: DCP Shahdara Surendra Chaudhary says, “We received a phone call at Geeta Colony Police Station regarding a major fire in a house at approx 5:30am. Accordingly, local police, fire brigade, ambulance and PCR Vans rushed to the spot. 9 people were rescued and were… https://t.co/OMVHM8KoDf pic.twitter.com/5G2WPfYAE0
— ANI (@ANI) March 14, 2024

இருப்பினும் கடும் சவால்களுக்கு மத்தியில் தீயணைப்பு வாகனம் கொண்டு சென்ற பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்தனர். – இதுகுறித்து டிசிபி ஷஹ்தரா சுரேந்திர சவுத்ரி கூறுகையில், “அதிகாலை 5:30 மணியளவில் கீதா காலனி காவல் நிலையத்தில் ஒரு வீட்டில் பெரும் தீ விபத்து குறித்து தொலைப்பேசி வாயிலாக தகவல் கிடைத்தது. அதன்படி, உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் பிசிஆர் வேன்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் காண

Source link