மயிலாடுதுறையில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்க நிகழ்ச்சி இந்திய கிரிக்கெட் அணி வீரர் கலந்து கொண்டு அகாடமியை துவங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை விமேக்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கிரிக்கெட் அணியின் வேக பந்துவீச்சாளர் நடராஜன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி பயிற்சி அகாடமியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடராஜ் கூறியதாவது: கிராமப்புறங்களில் இருக்கும் வாய்ப்பைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 
Manjummel Boys: “கமல்ஹாசன் கண்கலங்கிட்டார்” – மஞ்சும்மல் பாய்ஸ் குறித்து குணா இயக்குநர் சந்தான பாரதி!

கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும் எந்த துறையை தேர்வு செய்தாலும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். 20 வயதில் ஒரு லட்சியம் வைத்து முன்னேறினால் 30 வயதில் இலக்கை அடைய முடியும். லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை, பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன்.  கிரிக்கெட் விளையாடும் பொழுது மூத்தவனாக நீ எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றுகிறான் என்று பலர் பேசினார்கள்.
TN Weather: அடுத்த 3 நாட்கள்! தமிழ்நாட்டில் பொளக்கப்போகும் வெயில் – லேட்டஸ்ட் அப்டேட்

இன்று சாதித்த பிறகு எனக்கு அப்பவே தெரியும் என்று சொல்கிறார்கள். இதுதான் உலகம், மற்றவர்களுக்காக வாழ வேண்டாம் உங்களுக்கு பிடித்த விஷயத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும். இப்பொழுது கிராமப்புறம் மட்டுமன்றி அனைத்து இடங்களிலும் செல்போன்கள் வைத்து விளையாடுகின்றனர். உடலுக்கு ஆரோக்கியமாக நல்ல காற்றில் குறைந்தது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். அனைத்து விளையாட்டு அவசியம் அதேபோல் படிப்பும் அவசியம். ஆனால் படிப்பிற்கும் எனக்கும் தூரம் படிப்பு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்.
Ethirneechal: வீட்டில் நடக்கும் சண்டை: குணசேகரனுக்கு கொண்டாட்டம்: தர்ஷினி பற்றி கிடைத்த க்ளூ: எதிர்நீச்சலில் இன்று

இப்போதும் எனக்கு மொழி பிரச்சனை இருக்கு படிக்கும் பொழுது செங்கல் சூளையில் வேலை செய்து இருக்கிறேன், கட்டிட வேலையை செய்து இருக்கின்றேன். அதை ஒரு தடையாக நினைக்காமல் உழைத்ததால் தான் முன்னேற முடிகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து விளையாட்டுகளிலும் அனைவரும் சாதிக்க வேண்டும் தன்னம்பிக்கையுடன் தன்னடக்கமும் முக்கியம் என்று பேசினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற நட்ராஜ் உடன் மாணவ மாணவிகள் இளைஞர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
Divya Sathyaraj: அரசியலில் குதிக்கிறார் நடிகர் சத்யராஜ் மகள் – எந்த கட்சியில் சேர்கிறார்? அவரே தந்த பதில்!

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Онлайн-платформа https://inventure.com.ua/uk про инвестиции, финансовые рынки и экономику Украины и мира. Актуальные новости, профессиональная аналитика, обзоры активов, инвестиционные стратегии и…

  2. Хочешь заказать еду? https://kejtering-moskva-s-dostavkoj.ru фуршеты, банкеты, корпоративы, свадьбы и частные праздники. Меню составляется с учетом количества гостей, пожеланий заказчика и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed