தமிழ்நாடு:

கூட்டணி கட்சிகளுடன் மக்களவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக தீவிரம் – விசிக உடன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை – தேமுதிக உடனான கூட்டணி இறுதியாகிறதா?
கூட்டாட்சி கருத்தியலை உயர்த்திப் பிடிக்க  தொடர்ந்து உழைப்போம் – பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி
தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பிற்கான தமிழ் தேர்வில் 12 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்
மிக்ஜாம் புயல் நிவாரணம் – விடுபட்டவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.6000 வரவு வைத்த தமிழ்நாடு அரசு
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க உயர்நிதிமன்றத்திற்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் – வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கலாம்

இந்தியா:

மக்களவை தேர்தல் பரப்புரைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம் – விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவரை கைது செய்தது காவல்துறை – வாடிக்கையாளர் போல் வந்து வெடிகுண்டு வைத்தது யார் என விசாரணை
பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாயாக ரூ.1.68 லட்சம் கோடி வசூல் – மத்திய அரசு
மேற்குவங்கத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி – மாநிலத்திற்கான நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக முன்வைத்தார்
குஜராத்தில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள்  – பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
தெலங்கானாவைச் சேர்ந்த மேலும் ஒரு பிஆர்எஸ் எம்.பி. பாஜகவில் இணைந்தார்
97.62 சதிவிகித 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துள்ளன – ரிசர்வ் வங்கி தகவல்
அம்பானி குடும்பத்தின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது 

உலகம்:

நிலவுக்கு அமெரிக்க தனியார் நிறுவனம் அனுப்பிய விண்கலம் – பூமி உடனான தொடர்பு ரத்து
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னியின் உடல் நல்லடக்கம் – ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்
உலகளவில் 100 கோடிக்கும் அதிகமானோர் உடல் பருமனால் பாதிப்பு – லான்செட் ஆய்வில் தகவல்
வங்கதேசத்தின் டாக்கா நகரில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 44-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

விளையாட்டு:

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் – மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகல் இன்று மோதல்
மகளிர் பிரீமியர் லீக் – குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் உத்தரபிரதேச அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதி – தமிழ்நாடு – மும்பை இடையேயான போட்டி இன்று தொடக்கம்

Published at : 02 Mar 2024 07:02 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed