இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. அந்தவகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இதனிடையே இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஹிட்மேன் ரோகித் சர்மா சாதனை:

முன்னதாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றவது டெஸ்ட் போட்டியில் தான் டேவிட் வார்னரின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார். அந்தவகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரராக 2449 ரன்களை குவித்து முதல் இடத்தில் இருக்கிறார்.

WTC வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள்:

ரோகித் சர்மா- 53 இன்னிங்ஸ்களில் 2449 ரன்கள்

டேவிட் வார்னர் – 68 இன்னிங்ஸில் 2423 ரன்கள்

உஸ்மான் கவாஜா – 48 இன்னிங்ஸ்களில் 2238 ரன்கள்

திமுத் கருணாரத்ன – 43 இன்னிங்ஸ்களில் 2078 ரன்கள்

டீன் எல்கர் – 56 இன்னிங்ஸில் 1935 ரன்கள்

அதேபோல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் வெற்றிகரமான பேட்டராக இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் இருக்கிறார். ஆஸ்திரேலிய ஜோடியான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Gujarat Giants vs Mumbai Indians: பந்து வீச்சில் மிரட்டிய அமெலியா கெர்…மும்பை அணிக்கு 127 ரன்கள் இலக்கு!

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!