இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோடில் முத்து, மனோஜ் பார்க்கில் அமர்ந்திருப்பதை பார்த்து விடுகிறார். இதனையடுத்து இது குறித்து பார்க்க செக்யூரிட்டியிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். அவர்கள் இருவரும் தினம் இங்கு வந்து நேரம் செலவிடும் விஷயத்தை அந்த செக்யூரிட்டி முத்துவிடம் புட்டு புட்டு வைக்கிறார். அந்த செக்யூரிட்டி பேசிய அனைத்தையும் முத்து தனது செல்போனில்  வீடியோவாக பதிவு செய்து கொள்கிறார்.
இதனையடுத்து முத்து, நாள் முழுவதும் அங்கேயே இருந்து மனோஜ் மற்றும் அவரின் பார்க் நண்பர் இருவரும் பேசுவது, கடலை சாப்பிடுவது, விளையாடுவது, படுத்து தூங்குவது என அனைத்தையும் தன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொள்கிறார்.
இதனையடுத்து முத்து வீட்டுக்கு செல்கிறார். முத்துவை பார்த்த அண்ணாமலை “என்ன இன்னைக்கு சவாரி எதுவும் இல்லையா? சீக்கிரம் வந்துட்ட” என முத்துவிடம் கேட்கிறார். அதற்கு முத்து  “இன்னைக்கு மீனு ஒன்னு மாட்டி இருக்குப்பா, அதை நல்லா வறுத்து எடுக்கணும்” எனக் கூறுகிறார். அதற்கு அண்ணாமலை மீன் வாங்கி வந்திருக்கியா என கேட்க, “இது அந்த மீன் இல்லப்பா கொழுப்பெடுத்து சுத்திக்கிட்டு இருந்த மீன், மாட்டிக்கிச்சி” என சொல்கிறார்.
முத்து அண்ணாமலையை சோபாவில் அமர வைக்கிறார். அங்கு வரும் பார்வதியையும் நீங்க தான் சீஃப் கெஸ்ட் எனக் கூறி அமர் சொல்கிறார். இதனையடுத்து ரவி ஸ்ருதியை அழைக்கிறார். பின் மீனாவை அழைத்து ரோகினியை கூப்பிட சொல்கிறார். மீனா, ரோகினியை அழைத்து வருகிறார். ரோகினியிடம் ”அவ இன்னும் வரல?” எனக் கேட்கிறார். அதற்கு ரோகினி ”எதுக்கு இப்போ அவரை கேட்கறீங்க?” என்கிறார். ஸ்ருதி, ”ஆண்டி இவரு எதுக்கு இப்போ எல்லோரையும் கூப்டுக்கிட்டு இருக்காரு” என்கிறார். அதற்கு விஜயா, “இவனுக்கு வேற வேலை பொழைப்பு இல்லமா” என்கிறார்.
அதற்கு முத்து ”யாருக்கு எனக்கு வேலை பொழப்பு இல்லையா? இதோ இப்போ தெரிஞ்சிடும்” என்கிறார். முத்து மனோஜ் குறித்து கூறியதும், ரோகினி, விஜயா உள்ளிட்ட அனைவரும் மனோஜூக்குக்கு சப்போர்ட் செய்து பேசுகின்றனர். முத்து அந்த வீடியோவை ப்ளே செய்ததும் அனைவரும் அதை பார்த்து வாயடைத்துப் போகின்றனர். வீடியோ முடிந்ததும் வீட்டிற்குள் நுழையும் மனோஜ், “ஏய் ஏண்டா பூக்கூடைய கேட்டு பக்கத்துலய வச்சி இருக்கிங்க.. எப்டிடா வீட்டுக்குள்ள வரது” எனக் கேட்கிறார். 
மேலும் மனோஜ் இன்று தான் வேலை பார்க்கும் ஷோ ரூமுக்கு நடிகர் விஜய் வந்ததாக கூறுகிறார். விஜய் புதிதாக கார் பார்க்க வந்ததாக கூறுகிறார். இதை பார்த்து விஜயா, திருதிருவென விழிக்கிறார். ரோகினியும் மனோஜ் கூறும் பொய்யை பார்த்து திகைத்துப் போய் நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

Source link


Latest News

View All

  1. Проверить стоимость: монтаж перегородок из гипсокартона — цена за м? средняя цена по сметам из договоров и диапазон расценок.

  2. [url=https://znakomstva-store.ru]секс знакомства[/url] — отличный способ найти подходящего взрослого партнёра для общения и встреч по взаимному согласию. Перед свиданием рекомендуется заранее…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed