குழந்தை நலக்குழுவிற்கு 1 உறுப்பினர் நியமனம் செய்தல் தொடர்பாக.

2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக் குழுவிற்கு காலியாக உள்ள 1 உறுப்பினர் பணியிடத்தினை நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தை நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.

விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும் போது 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு நபர் குழந்தை நல குழு தலைவர் அல்லது உறுப்பினராக நியமனம் செய்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார். இதற்கான விண்ணப்ப படிவத்தை செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை) கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

இயக்குநர்,

சமூகப்பாதுகாப்புத்துறை,

எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,

சென்னை 600 010.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

குரூப்-2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகின. குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகியாது.

ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்.12 முதல் பிப்.17ம் தேதி வரை நடைபெறும். இதற்கான கலந்தாய்வு பிப்ரவரி-21ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த மாதம் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ்‌ சரிபார்ப்புக்கான முடிவுகள்‌ தேர்வாணைய வலைதளத்தில்‌ இருவழித்‌ தொடர்பு முறையில் (Interactive Mode) வெளியிடப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Самое важное сегодня: https://mirsmi24.ru
livescore für sportwetten my web blog :: Basketball Wetten
gratis sportwetten ohne einzahlung Check out my blog post was heißt hc 0 7 5 2 bei basketball wetten -…
Читать далее: https://zetfail.ru
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

“மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!”- திமுக தலைவர் ஸ்டாலின் | dmk stalin about changes in party | ACTPnews.com

“என்னுடைய அரசியல் ஆசானாக அண்ணன் திருமாவளவனை ஏற்றுக்கொள்கிறேன் என்று.!”- வன்னி அரசுக்கு உதயநிதி பதில்| udhayanidhi stalin answer to vanni arasu in tn assembly | ACTPnews.com

'கொளத்தூர் தொகுதியை சேகர் பாபுவிடமிருந்து பறிக்கும் திமுக?' – கட்சி மறுசீரமைப்பை தொடஙகிய ஸ்டாலின்! | ACTPnews.com

நேபாள வெள்ளம்: தமிழர்களை மீட்கத் தீவிர நடவடிக்கை – வெங்கட் நாராயணா! | Nepal Floods: TN Special Rep Venkatnarayana Update on Rescue Ops | ACTPnews.com

சொத்துவரி விவகாரம்: கேள்வி கேட்ட திமுக கவுன்சிலர்; சரண்டர் ஆன சென்னை மாநகராட்சி ஆணையர்! – | ACTPnews.com

wett prognose heute Feel free to visit my blog … basketball wetten systeme