சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 15) எபிசோடில் வீட்டு பெண்களை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு எப்படியாவது அவர்களையும், ஜீவானந்தத்தையும் பழி வாங்க வேண்டும் என முன்னேற்பாடுகளுடன் காய் நகர்த்துகிறார் குணசேகரன். அந்த வகையில் நேற்று அவர்கள் அனைவரையும் கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அவர்களின் நிலையை பார்த்து தர்ஷன், கதிர், ஞானம் மற்றும் சக்தி என அனைவரும் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். ஆனால் அது எதையுமே பொருட்படுத்தாமல் கர்வமாக நிற்கிறார் குணசேகரன்.
சாருபாலா என்ட்ரி:
கோர்ட்டில் பெண்கள் தரப்பில் வழக்கை எடுத்து நடத்த சாருபாலா என்ட்ரி கொடுக்கிறார். அவரை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். எதிர்தரப்பு வக்கீல் தேவையே இல்லாமல் ஈஸ்வரியின் கடந்த கால வாழ்க்கை என அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சொல்லி, குணசேகரன் மிகவும் நல்லவர் என்றும் ஈஸ்வரிக்கு அனைத்து சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார் என்ற போக்கில் வாதாடுகிறார். அடுத்ததாக ரேணுகாவை விசாரிக்க அழைக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வீடியோ மூலம் தர்ஷினி:
எந்த தப்புமே செய்யாத பெண்களை குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து, குற்றவாளிகளாக முத்திரை குத்த பிளான் போடுகிறார் குணசேகரன். அவர்கள் அனைவரையும் எதிர் தரப்பு வக்கீல் விசாரணை செய்கிறார். அப்போது அவர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் தர்ஷினி வீடியோ மூலம் வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறாள். அதை கேட்டு குணசேகரன் கூட கலங்குகிறார். அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் பெண்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.வீடியோ மூலம் வந்த தர்ஷினி அப்படி என்ன சொல்லி இருப்பாள்? இது அனைத்தும் குணசேகரன் சதி திட்டமாக இருக்குமோ? இதை தான் சில எபிசோட்களுக்கு முன்னர் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என சொன்னாரா? தர்ஷினி பழி அனைத்தையும் அம்மா மற்றும் சித்திகள் மீது சுமத்த போகிறாளா? அவளுக்கு பின்னால் இருந்து ஆட்டி வைப்பது யார்? குணசேகரன் கலங்குவது போல் நடிப்பது எதற்காக? இப்படி பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தர்ஷினி காணாமல் போனதை பற்றியும், அவளை தேடும் படலம் ஒரு பக்கம் இருக்க குணசேகரனுக்கு எதிராக திரும்பிய தம்பிகள் சார்ந்த கதைக்களம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது. தர்ஷினி பற்றிய தகவலறிய ரசிகர்களும் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். இப்படி விறுவிறுப்பாக நகர்ந்து வந்த சூழலில் திடீரென ஒரு ட்விஸ்ட் வைத்து தர்ஷினியை வீடியோ மூலம் காட்டி அதன் மூலம் அடுத்த இடியை இறக்கியுள்ளார் இயக்குநர். இது ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. அடுத்து எதிர்நீச்சலில் (Ethirneechal ) என்ன நடக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.
மேலும் காண

























A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…