Saidai Duraisamy Son Accident: சென்னை முன்னாள் மேயரும்,  அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகருமான சைதை துரைசாமியின் மகனும், இயக்குனருமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று இருந்த போது, அவர் பயணித்த கார் கடந்த வாரம் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவரது ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெற்றி மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில், விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பாறையின் அடியில் உடல் சிக்கியிருந்த நிலையில், மீட்பு படை வீரர்கள் அவரது உடலை கண்டுள்ளனர். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு வெற்றியின் உடைகள் இருந்த பெட்டி போன்றவை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் வெற்றியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக தனது மகன் தொடர்பாக தகவல் தெரிப்பவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, சைதை துரைசாமி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
 
 

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed